Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரை

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கள்) தொடங் கியது. முதல் நாளான இன்று பாராளு மன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடந்தது. இதில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கலந்து கொண்டு உரையா ற்றினார். அவர் பேச்சு விபரம் வருமாறு:-

காஷ்மீர் மாநிலம் லடாக்கில் கடந்த ஆண்டு மேகம் வெடித்து மழை வெள்ளம் ஏற்பட்டதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன். சமீபத்தில் பண்டிட் பீஷ்மர் ஜோஷி கால மானார். அவரது மரணம் ஈடுசெய்ய இயலாதது.  டெல்லி யில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த காமன் வெல்த் விளை யாட்டுப் போட்டிகள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. நமது வீரர்கள் குறிப்பிடத்தக்க வெற்றி களைப்பெற்றனர்.

டெல்லி நகர மக்கள் மிக ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர். இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தியது நமக்கு பெருமை தருகிறது.   வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க உறுதியான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசுகளின் விசாரணை பிரிவு உள்பட எல்லா சட்ட குழுக்களின் உதவி தேவை. கறுப்பு பணத்தை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.   நல்ல தூய்மையான ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அர சின் தரம் மேம்பட உறுதியான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வரு கின்றன. ஊழலை ஒழிக்க மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊழலை சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஒழிப்பது பற்றி மந்திரி சபை குழு விவாதித்துள்ளது. இந்த குழு பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. இயற்கை வளம் சுரண்டப் படுவதைத் தடுக்கவும், ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளை விரை ந்து முடிக்கவும் சட்ட திருத்தம் செய்ய மந்திரிகள் குழு தீர்மானித் துள்ளது. அவர்களது அறிக்கை விரைவில் எதிர்பார்க்கப் படுகிறது.

இந்திய பொருளாதாரம் நல்ல முன்னேற்றமான நிலையில் உள்ளது. என்றாலும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது ள்ளது. உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட் களின் விலையை குறைக்க சீர்திருத்தம் செய்ய வேண்டியது ள்ளது. அது நமது பொருளாதார வளர்ச்சியை பாதிக்காத வகை யில் இருக்கும். அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் அமையும். இந்த இரட்டை லட்சியங்களை பூர்த்தி செய்ய முதலீட்டை ஈர்த்து உள்ளூர் சூழ்நிலை மாற்றப்படும். பொது மற்றும் தனியார் முத லீடு உற்சாகப்படுத்தப்படும்.

பாகிஸ்தானுடன் எல்லா பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியா விரும்புகிறது. வெளிநாட்டு கொள் கைகளில் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: