Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய சோனி எக்ஸ் 8

எக்ஸ்பீரியா 10 போன்ற உயர்ரக போன்களை வாங்க இயலாத வர்களுக்கென தயாரி க்கப்பட்ட எக்ஸ்பீரியா 8, ஏறத்தாழ அனை த்து வசதிகளையும் சிறப் பாகத் தரும் ஒரு ஆண் ட்ராய்ட் போனா கும். நண்பர்களுடன் அளவ ளாவ, பொழுது போக்கு அம்சங்களை முழு மையாக ரசிக்க, எளிதாக இணைப்புகளை மேற் கொண்டு செயல்பட எனப் பல இலக்குகளைக் கொ ண்டு வடிவமைக்கப் பட்ட போனாக வந்துள்ளது சோனி எரிக்சன் எக்ஸ் 8. இதன் தொடுதிரையின் நான்கு மூலைகளில் தொட்டு நம் விருப்பமான செயல்பாடுகளை இயக்கலாம். ட்வீட்ஸ், மெசேஜ்கள், பேஸ்புக் மற்றும் பிற தளங்கள் தொடர்பு ஆகிய அனைத்தும் மிக எளிதாகக் கிடைக்கின்றன. அனைத்தையும் அப்டேட் செய்வதற்கான வசதிகளும் தரப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் 600 மெஹா ஹெர்ட்ஸ் ப்ராசசருடன் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் டவுண்ட்லோட் செய்து இயக்க லாம். இதன் மற்ற அம்சங்கள்: 128 எம்பி ஸ்டோரேஜ், 162 எம்பி ராம் நினைவகம், 16 ஜிபி வரை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஏழு வண்ணங்களில் அமைப்பு, டிஜிட்டல் ஸூம் கொண்ட 3 மெகா பிக்ஸெல் கேமரா, வீடியோ இயக்கம், அளவ ற்ற முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ் புக், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஜ், புஷ் மெயில், எம்பி3 பிளே யர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, ட்ரேக் ஐ.டி., 3ஜி தகவல் சேவை, A2DP இணைந்த புளுடூத், வை-பி, ஆண்ட்ராய்ட் இயக் கம், ஆக்ஸிலரோமீட்டர், 3 அங்குல அகலத்தில், கீறல் விழ முடியாத டி.எப்.டி. கெபாசிடிவ் தொடுதிரை, ஜி.பி.எஸ்., மற்றும் வழக்கமான மற்ற வசதிகளுடன் இந்த போன் வடிவமைக்கப் பட்டுள்ளது. 1200 mAh திறன் கொண்ட பேட்டரி 446 மணி நேரம் மின்சக்தியை தக்க வைக்கிறது. தொடர்ந்து 4 மணி 45 நிமிட ங்கள் பேச திறன் அளிக்கிறது. கூகுள் சர்ச், மேப்ஸ், யு-ட்யூப், காலண்டர், கூகுள் டாக், டாகுமெண்ட் வியூவர், பார்கோட் ஸ்கேனர், வாய்ஸ் மெமோ ஆகியவை பதிந்து தரப்படுகின்றன. இதன் பரிமாணம் 99 x 54 x 15 மிமீ. எடை 104 கிராம். அறிமு கத்தில், ரூ.16,000 என்ற அளவில் பேசப்பட்ட இந்த போன், தற் போது ரூ.12,700 என்ற அளவில் கிடைக்கிறது.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: