Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மவுஸும் – அதன் பயன் பாடுகளும்

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப் யூட்டருடனான நம் தொட ர்பை பெரும் பாலான வே ளைகளில் அமைப்பது மவுஸ் தான். சிறிய அம்புக் குறி போன்ற கர்சரை மானிட் டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல் பாடுகளை மேற் கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல் படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இதனை அழுத்திக் கிளிக் செய்வதனையே ஆங்கிலத்தில் ‘leftclicking’ எனக் கூறுகின்றனர். ஏதாவது ஒரு பைல் அல்லது இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றால் மவு ஸின் அம்புக் குறி முனையை பைல் பெயர் அல்லது செயல்ப டுத்தும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று இந்த இடது பட்ட னை இருமுறை கிளிக் செய்தால் உடனே பைல் இயக்கத்திற்கு வந்துவிடும்.

இதே போல ஒரு விண்டோவினை மூட, சிறியதாக்க இந்த மவுஸின் முனையை அதற்கான இடத்தில் கொண்டு சென்று அழுத்தினால் போதும்.

ரு முறை கிளிக் செய்து அப்ப டியே பட்டனை விடாமல் மவு ஸை இழுத்தால் நாம் தேர்ந் தெடுத்த பைல் அல்லது டெக்ஸ்ட் அப்படியே இழுபடும். அதனை நாம் விரும்பும் இடத்திற்குக் கொ ண்டு சென்று பட்டனை அழுத் துவதிலிருந்து எடுத்துவிட் டால் அந்த பைல் அல்லது டெக்ஸ்ட் விட்ட இடத்தில் அமர் ந்துவிடும்.

டெக்ஸ்ட் உள்ள டாகுமெண்ட்டில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று எந்த இடத்தில் விடுகி றோமோ அந்த இடத்தில் நீங்கள் டைப் செய்யத் தொட ங் கலாம்.

வலது புறத்தில் உள்ள பட்டன் பொதுவாக சிறிய மெனு ஒன் றைக் கொண்டு வர உதவு கிறது. குறிப்பாகத் தேர்ந்தெ டுக்கப்பட்ட டெக் ஸ்ட் மற்றும் படங்களில் மாற்றங்கள் செய் திட அவற்றைத் தேர்ந் தெடு த்தபின் அதில் மவுஸின் கர்சரை வைத்து வலது பட்டனை அழுத்தினால் அதற்கேற்ற மெனு கிடைக்கும். அதில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான பிரிவுகள் கிடைக்கும். அதில் எந்த பிரிவைச் செயல்படுத்த வேண்டுமோ அதில் கர்சரை வைத்து இடது கிளிக் செய் தால் போதும். இத்தகைய மெனுக்களில் நாம் செய ல்படுத்த சில பொதுவான கட்டளைகள் கிடைக்கும். அவை: =
Open: டபுள் கிளிக் செய்து செயல்படுத்தும் பணியினை இந்த பிரி வில் கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்;
Cut: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது படத்தை நீக்கு வதற்கு;
Copy: இதில் கிளிக் செய்தால் தேர்ந் தெடுக்கப்பட்ட விஷ யங்கள் காப்பி ஆகும். பின் அதனை எங்கு வேண்டு மானாலும் ஒட்டிக் கொள் ளலாம்.
Create Shortcut: குறிப்பிட்ட புரோகிராம் அல்லது பைலுக்கான குறுக்கு வழி ஒன்றை அமைத்திட இது உதவும். இதனை உருவா க்கிவிட்டால் அப்போது கிடைக்கும் ஐகானில் கிளிக் செய்து அதற்கான புரோகிராமை இயக்கலாம்; பைலை இயக்கத் திற்குக் கொண்டு வரலாம்.
Delete: நிரந்தரமாக நீக்கிட; Rename: பைல் அல்லது புரோ கிராமிற்குப் புதிய பெயர் தர. மற்றும் Properties: பைல் அல்லது புரோகிராம் குறித்த அதன் தன்மை களை அறிய இது உதவுகிறது.
மவுஸின் நடுவே சிறிய உருளை ஒன்று இருப்பதைப் பார்ப்பீர்கள். டெக்ஸ்ட்டில் நாம் மேலும் கீழும் செல்ல இது உதவும். என்டர் அழுத்தி நாம் கீழே செல்லு வோம். அல்லது ஆரோ கீகளை அழுத்தி மேலே செல்வோம். அந்த வேலை யை எளிதாக மேற் கொள்ள இந்த வீல் உதவுகிறது. இதனுடைய பல சிறப்பு பயன் பாடுகள் குறித்து அந்த அந்த சாப்ட்வேர் தொகு ப்புகளுக்கான டிப்ஸ்களில் பார்க்கலாம்.

வயர் இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக் கூடிய வயர்லெஸ் மவுஸ் வெகு நாட்களாகப் புழக்கத்தில் உள்ளது. அதன் பயன் பாடுகளும் மேலே குறிப்பிட்டபடி தான் இருக்கும்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: