Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மேல்-சபை தேர்தலுக்கு இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட்டு

தமிழ்நாட்டில் மீண்டும் மேல்-சபை அமைக்க ஜனாதிபதியும், பாராளுமன்றமும் ஒப்புதல் வழங்கி உள்ளது.   மேல்-சபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்காளர் இறுதிப் பட் டியலும் வெளியிடப்பட்டு விட்டது. தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே தமிழ் நாட்டில் மேல்-சபை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாரதீய ஜனதாவை சேர்ந்த வக்கீல் வானதி சீனிவாசன், திண்டிவனம் ராமமூர்த்தி உள்பட 11 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை 2 மாதங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து வக்கீல் வானதி சீனிவாசன் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறி இருந்த தாவது:-
மேல்-சபை உருவாக்குதல் சட்டம், மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் ஆகியவற்றின்படி தமிழக மேல்-சபை தொகுதி வரையறை செய்யப்பட வில்லை. மேல்-சபை தொகுதி சீரமைப்பு செய்யப்பட்ட பின் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, அதை பாராளுமன்றத்திலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெறவேண்டும். ஆனால், தமிழக மேல்- சபை தேர்தல் ஏற்பாடுகள் ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற தும் தொடங்கி விட்டது. பாராளுமன்ற ஒப்புதல் பெறப்படவில்லை. ஆசிரியர்கள், பட்டதாரிகள் சான்றிதழ்கள் நேரடியாக ஆய்வு செய்யப்படவில்லை. அவசரமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே உள்ள எம்.எல்.ஏ.க்களை கொண்டு மேல்-சபை தேர்தலை நடத்துவது சரியல்ல. எனவே தமிழக மேல்-சபை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.   ஜனவரி மாதம் 17-ந்தேதி இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பிலும், தேர்தல் கமிஷன் சார்பிலும் வக்கீல்கள் ஆஜர்ஆகி வாதம் செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கோகுலே, பன்சால் ஆகியோர் தமிழ்நாட் டில் மேல்-சபை தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து இன்று தீர்ப்பு அளித்தனர். அடுத்தக்கட்ட விசாரணை தேதியையும் பின்னர் அறிவிப்பதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.   தீர்ப்பு குறித்து வழக்கு தொடர்ந்த பா.ஜனதா வக்கீல் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் முடிந்தபிறகு மேல்-சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பது பாரதீய ஜனதாவின் கோரிக்கை. ஆனால் அவசரமாக மேல்- சபை தேர்தலை தேர்தல் ஆணையம் மூலம் நடத்த முயன்றனர். தற்போது மேல்-சபை தேர்தலுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இது பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: