பிரபல இசையமைப்பாளரும் டைரக்டருமான கங்கை அமரன் சமீபத்தில் இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியதாக செய்திகள் வெ
ளி யானது.
கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபு மூலம் இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாய் வாழ் வது போன்று தமிழ் படம் ஒன் றை எடுக்கும்படி ராஜ பக்சே கேட்டுக் கொண்ட தாகவும் அதற் கான செலவை ஏற்றுக் கொள் வதாக அவர் தெரி வித்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி கங்கை அமரனிடம் கேட்டபோது மறுத் தார்.
அவர் கூறியதாவது:- நான் இலங்கை சென்றது உண்மை. ஆனால் ராஜபக்சேவை சந்திக்க வில்லை. அங்கு நடந்த சித்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக போனேன் உலகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட சித்தர்கள் அங்கு வந்து இருந்தனர். சொந்த பயணமாகவே அங்கு சென்றேன். ராஜபக்சேவை நான் ரகசியமாக எப்படி சந்தித்து இருக்க முடியும். அப்படி சந்தித்து இருந்தால் உள்ளூர் பத்திரிகைகளில் போட்டோ வந்து இருக் காதா? இது அடிப்படையே இல்லாத வதந்தி ராஜபக்சேவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)