விநாயகப் பெருமானுக்குரிய நான்கு விரதங்கள் ஆகும்.இந்த
நான்கும் ஓவ்வொரு வாரத்திலும் வரும் வெள்ளிக் கிழமை யிலும் (சுக்கிர வாரம்) ஓவ்வொருமாதத்திலும் வரும் வளர் பிறை சதுர்த்தியும் தேய் பிறைசதுர்த்தியும் (சங்கட வறா சதுர்த் தி ) விநாயக சஷ்டியுமே ஆகும்.
ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே மக்கள் விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடுகின்றார் ஆவணி வளர் பிறைச் சதுர்த்தியே விநாயகர் அவதரித்த நாள் என்று கூறுவர். அந்த ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியும் விசாக நட்சத்திரமும் (முருகன் அவதரித்தும் விசாக நட்சத்திரமே என்பது குறிப்பிடத் தக்கது.) சோமவாரமும் (திங்கட் கிழமை) சிம்ம இலக்கணமும் கூடிய நாளாகும் ஆகையால் இந்த ஆவணிச் சதுர்த்தி மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
விநாயக சதுர்த்தியன்று புற்று மண்ணால் விநாயகப் பெருமா னின் திரு வுருவம் அமைத்து,அதில் விநாயகரை மந்திரம் பாவனை கிரியை களால் எழுந்தருளச் செய்து அபிஷேக அலங் காரங்கள் செய்து நிவேதனப் பொரு ள்கள் வைத்துப் போற்றி வழிபடுதல் முறையாகும்.
கிருஷ்ணபட்ச சதுர்த்தியின் அதிபதியான சக்தி விநாயகரை வழி பட்டபோது சந்திரோதயத்தில் நீ என்னை வழிபட்டதால் கிருஷ் ணபட்ச சதுர்த்தியும் சந்தி ரோத யமும் கூடிய காலம் முக்கிய விரத நோரமாகும்.அப்பொழுது என்னை வழி படு வோருக்கு என் அருள் நிச்ச யம் கிடைக்கும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் கடை ப்பிடிப்போரின் சங்கட மெல்லாம் தீர்ந்து விடும் உனக்கும் சங்கட ஹரணி என்ற பெயர் உண்டா கட்டும் என்று வாழ்த்தினர். அங்கா ரகன் விநாயகரை ஒரு செவ்வாய் க்கிழமை சதுர்த்தியில் (மாசி மாததேய்பிறை சதுர்த்தி) பூஜை செய்து பேறு பெற்றான் அதனால் செவ்வாயும் சங்கடஹர சதுர்த்தி யும் சேரும் நாள் மிக சிறப்பு வாய் ந்ததாக கருதப்படுகிறது.
மாசி மாததேய்பிறைச் செவ்வா ய்க் கிழமையன்று சதுர்த்தி வரு மானால் அன்று கணபதிக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விதர த்தைத் தொடங்குவார்கள்.சங்கடஹர சதுர்த்தியன்று காலை முதல்
சந்தி ரோதயம் வரை நீர் தவிர வேறு ஏதும் உட் கொள் ளாமல் சந்திரனைப் பார்த்து பின்னர் அருக்கியம் கொடுத்து (மந்திர நீர் இறைத்தல்) 21 அறுகம்புல் கொண்டு விநாயகரின் 21 திருப்பெயர்களை அர்ச்சனை செய்து அதன்பின் உப்பு காரம் சேர்க்காத உணவை உட்கொள்ள வேண்டும்.
இரவு கண்விழித்து விநாயகரின் கதை களைக் கேட்க வேண்டும் இவ்வாறாக ஒராண்டு காலம் சதுர்த்தி நாட்கள் தோறும் விடா மல் விரதம் மேற் கொள்ளவேண்டும் ஆண்டு முழுவதும் 24 சது ர்த்தி களிலும் விரதம் மேற் கொண்டு ஆவணி சுக்கில சதுர் த்தியில் விதர த்தைப் பூர்த்தி செய்து விநாயகரை வழி பட்டால் அனைத்து பேறு களையும் பெறலாம்.
21 நாட்களும் ஒரு பொழுது மட்டும் உண்டு இறுதி நாளில் உப வாசம் இருந்து இளநீர்,கரும்பு அவல், எள்ளு ண்டை முதலான வற்றை படைத் தது சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும்.மேலும் இந்த 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும்
விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க மற்றும் கேட்க வேண்டும் .
இந்த 21 நாட்களிலும் விநா யக கவசத்தை நாள் ஒன் றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கை கூடுவது நிச்சயம். அடுத்த சஷ்டிநாள் ஏழை எளிய வரோடு அமைந்து உணவு உண்டு விதர த்தை நிறைவேற்ற வேண்டும். இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்