மத்திய பொது பட்ஜெட் வருகிற 28-ந்தேதி தாக்கல் செய்யப்பட
உள்ளது. இதற்காக மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பட் ஜெட் தயாரிப்பு பணிகளில் தீவி ரமாக ஈடுபட்டுள்ளார். 5 மாநில சட்டசபைகளுக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள தால், மக்கள் மனதில் எந்தவித அதி ருப்தியும் ஏற்படாத வகை யில் பட்ஜெட் அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் இருக்க திட்டமிடப் பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை தூண்டும் வகையில், பட்ஜெட் திட்ட அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மாத சம்பளம்
வாங்கும் நடுத்தரப் பிரிவு மக்களை கவர அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டமிட் டுள்ளார். இதற்காக வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த அவர் தீர்மானி த்துள்ளார். தற்போது வருமான வரி வில க்கு உச்சவரம்பு ரூ. 1 லட்சத்து 60 ஆயிர மாக உள்ளது.
இதை ரூ. 1லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது போல அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு கடுமையாக இருக்காது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தும் வகையில் வரி சீரமைப்பு இருக்கும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் முக்கியப் பொருட் களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க திட்டமிட ப்பட்டுள்ளது.
இதற்காக பெட்ரோல், டீசல் விலை குறையும் வகையில் கச்சா எண்ணை மீதான சுங்க வரி குறைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. பட்ஜெட் அறிவிப்புகளில் 90 சதவீத அறிவிப்புகள் விலைவாசியை குறைக்கும் வகையில்தான் இருக்கும் என்று நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்
இதயத்தில் இணைக்கிறோம்