நடிகை கங்கனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கவில்லை என்று நடிகர் மாதவன் மறுத்துள்ளார். 3 இடியட்ஸ் படத்திற்கு பிறகு இந்தி யின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மாத வன், தற்போது தனு வெட்ஸ் மனு என்ற இந்திப்படத்தில் நடித்து ள்ளார். படத்தில் மாதவன் ஜோடியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்து ள்ளார். படத் தின் கதைப்படி மாதவன் – கங்கானா இருவரும் ரொம்பவே நெருக்க மான காட்சிகளில் நடித்தி ருப்பதாகவும், இருவதும் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப் பதாகவும் மும்பை பத்திரிகைகள் படத்துடன் எழுதித் தள்ளி வருகி ன்றன.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் மாதவன், தனு வெட்ஸ் மனு படத்தில் நானும் கங்கனாவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப் பதாகவும். லிப் டூ லிப் கிஸ் அடித்திருப்பதாகவும் செய்திகள் வெளி யாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாகவோ, துரதிரு ஷ்டவசமாகவோ எனக் கும் கங்கனாவுக்கும் அப்படி ஒரு காட்சி அந்தப் படத்தில் இல்லை. ஆனாலும் செய்தி வந்துவிட்டது. அதைப் படித்து ரசிப்பதைத் தவிர வேறு வழியில்லை, என்று கூறியுள்ளார்.
மேலும் தற்போது தனு வெட்ஸ் மனு படத்தினை விளம் பரப்படுத்தும் வகையில் விளம்பர சுற்றுப் பயணத்தில் இருப்ப தாக கூறியிருக்கும் யூனிவர்செல் நாயகன் மாதவன், படத்தில் நடிப்பது கூட ஈஸி ; ஆனால் விளம்பர பணி இருக்கிறதே…. மகா கஷ்டம், என்றும் கூறியுள்ளார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)