Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழகம்- புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மார்ச் 1-ந்தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங் களில் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்ட சபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் கமிஷன் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.

5 மாநிலங்களிலும் தேர்தலை எப்போது நடத்துவது? எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்து வது என்பது பற்றி தலைமை தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி முடித்துவிட்டது.
ஓட்டுப்பதிவு நாட்களில் ஏதேனும் விழா நாட்கள் வருகிறதா? என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள், ஊழியர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடனும் தேர்தல் கமிஷனர்கள் விவா தித்து ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலைக்கு வந்துவிட்டதால், தேர்தல் தேதி மட்டும்தான் அறிவிக்கப்பட வேண்டியதுள்ளது. மார்ச் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் அட்டவணையை வெளி யிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே குரேஷியும், 1-ந்தேதி தேர்தல் தேதி வெளியிட வாய் ப்பு இருப்பதாக சூசகமாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

5 மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் அதிகமாக உள்ளதால், அந்த மாநிலத்தில் 5 கட்டங் களாக தேர்தல் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 2-வது வாரத்தில் அங்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கும் என்று தெரிகிறது. மே மாதம் 2-வது வாரம் 5-வது கட்ட தேர்தல் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே அந்த 2 கட்ட தேர்தலும் நடந்து முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே நாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். கேரளாவில் ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடை பெற வாய்ப்புள்ளது.
ஓட்டுப்பதிவுக்கான மின்னணு எந்திரங்கள் 5 மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. தேர்தல் தேதி அறிவிப்புக்கான நாள் நெருங்கி வருவதால் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.
தொகுதி பங்கீடு பேச்சை முடித்துவிட்டு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை கட்சிகள் தீர்மானிக்க வேண்டும்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: