Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெலுங்கானாவில் முழு அடைப்பு; தனி மாநிலம் கோரி…

தெலுங்கானா தனி மாநிலம் கோரி 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங் கானா கூட்டு போராட்டக்குழு தலைவர் பேராசிரியர் கோத ண்டராம் அழைப்பு விடுத்தி ருந்தார். இதன்படி இன்றும் நாளையும் தெலுங்கானா பகுதியில் முழு அடைப்பு நடைபெறுகிறது.
இதையடுத்து அங்குள்ள வாரங்கல், கரீம்நகர், மெதக், மெக பூப் நகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பஸ்கள் எதுவும் ஓடவி ல்லை. கடைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டத்திற்கு அங்குள்ள வக்கீல்கள், டாக்டர் கள், ஆசிரியர்கள், மருத்துவ ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.  முழு அடைப்பை யொட்டி தெலுங்கானா பகுதியில் ஏராளமான மத்திய போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதிரடிப்படை போலீசாரும் அங்கு தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

%d bloggers like this: