இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடனே யே முடிந்தது. இன்று காலை வர்த் தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.06 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3.47 புள்ளிகள் குறைந்து 18434.84 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.70 புள்ளிகள் குறைந்து 5512.90 புள்ளிகளோடு காணப்பட்டது. நாள் முழுவதும் சரிவிலேயே காணப்பட்ட வர்த்தகம் முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 142.15 புள்ளிகள் குறைந்து 18296.16 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 49.40 புள்ளிகள் குறைந்து 5469.20 புள்ளிகளோடு காணப்பட்டது
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்