Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2g ஸ்பெக்ட்ரம்: கூட்டுக்குழு விசாரணை: பாராளுமன்றத்தில்…

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தகவல் வெளியிட்டது. இந்த இழப்பின் பின்னணியில் யார் -யார் உள்ளார்கள் என்பதை அறிய பாராளுமன்ற கூட்டுக்குழு விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பாராளுமன்ற பொது கணக்கு குழு விசாரித்து வருவதால் கூட்டுக்குழு விசாரணை தேவை இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க் கட்சிகள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ஒருநாள் கூட நடத்த முடியாதபடி முடக்கின.
பட்ஜெட் கூட்டத் தொடரையும் முடக்கப் போவதாக எதிர்க் கட்சி கள் மிரட்டல் விடுத்தன. இதைத் தொடர்ந்து மத்திய அரசு பணி ந்தது. கூட்டுக்குழு விசாரணை நடத்த தயார் என்று அறிவித் தது.  பாராளுமன்றம் இன்று பகல் 11 மணிக்கு கூடியதும் பிரதமர் மன்மோகன் சிங் எழுந்து இது தொடர்பான அறிவிப்பை வெளி யிட்டார். அவர் கூறியதாவது:-

ஊழலை வேரோடு அழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஊழல் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக மேற் கொள்ள வேண்டி யவை குறித்து ஆய்வு நடந்து வருகி றது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர் பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசார ணை நடத்த அரசு சம்மதித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாங்கள் மேற்கொண்டு வந்த உண் மையான நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைக்க வில்லை. எதிர்க்கட்சிகளை இந்த விஷயத்தில் சமரசம் செய்ய முடிய வில்லை. பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த முடியா மல், அதனால் ஏற்படும் இழப்புகளை நமது நாட்டால் தாங்கிக் கொள்ள இயலாது.

இந்த சூழ்நிலையில் கூட்டுக்குழு அமைப்பதைத் தவிர எங்களுக்கு வேறுவழி இல்லை. எனவே கூட்டு க்குழு அமைக்கப் படுகிறது. கூட்டு க்குழுவை அமைக்க வேண்டிய நடவடிக்கைக ளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக் கொள்கிறது. இதற்கு உரிய தீர்மானத்தை பாராளு மன்றத்தில் விரைவில் கொ ண்டு வரவேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசி னார்.

இதை எதிர்க்கட்சி எம்.பி க்கள் வரவேற்றனர். எதிர்க் கட்சி தலை வர்கள் கூட்டுக் குழுவை ஆதரித்துப் பேசி னார்கள். பாராளுமன்ற பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில் கூறியதாவது:-

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்து இருப்பதை நாங்கள் வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பார்க்கவில்லை. இது ஜனநாயக த்துக்கு கிடைத்த வெற்றி. எனவே வெற்றி-தோல்வி என்பது போன்ற பேச்சை நாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் அமைதியாக எல்லா அலுவல்களும் நடைபெற பா.ஜ.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார்.

இடதுசாரி கட்சித்தலைவர்கள் பேசுகையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்காக நாங்கள் பிரத மரை பாராட்ட வேண்டியதில்லை. பிரதமர் தன் கடமையை செய்துள்ளார் என்றனர்.

கூட்டுக்குழு தொடர்பான தீர்மான் நாளை மறுநாள் (வியாழக் கிழமை) பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்று தெரி கிறது. மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி கபில்சிபல் அந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசு வார். அதன்பிறகு அந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவே ற்றப்படும். இதைத் தொடர்ந்து கூட்டுக்குழுவுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த குழுவின் விசாரணை உரிய முறையி ல் நடைபெறும்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: