Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“இது நடுநிசி நாய்கள் நவீன காலத்து திரைப்படம்!” கவுதம் மேனன் காட்டம்

டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நடுநிசி நாய்கள் படம் பல தரப்பட்ட விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வளர்ப்புத் தாயையே தார மாக்கிக்கொள்ளும் சர்ச்சையா ன கதையை மையமாக கொண் டு உருவாகியிருக்கும் இந்த படம் குறித்து, படத்தின் இயக் குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு அறிக்கை வெளியிட்டு ள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நடுநிசி நாய்கள் ஒரு நவீன கால தமிழ்ப்படம். இந்த திரைப்பட த்தின் மூலம் நான் தமிழ் சினிமாவின் அறிவிக்கப்படாத விதி களை உடைக்க முயற்சி செய்திருக்கிறேன். இது எனக்கும் கூட ஒரு புது வகையான திரைப் படம்தான். இருண்ட உண் மைகளும் மனதை பாதி க்கும் விஷயங்களும் கொ ண்ட படம் என்ற முறை யில் இது ஒரு பரிசோதனை. எல்லா வகையிலும் என்னு டைய முந்தைய படங்க ளிலிருந்து நடுநிசி நாய்கள் வேறுபட்டது. நான் என்னு டையது என்று அறியப்பட்ட பாணியிலிருந்து விலகி மாற்று பாணிகளை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன். புதிய பாணிகளை எனதாக்கி கொள்ள முயன்று கொண்டே இருக் கிறேன் என்பதன் வெளிப்பாடுதான் இத் திரைப்படம். எந்த ஒரு பரிசோ தனை முயற்சிக்கும் போற்று தலும், தூற்றுதலும் இருக் கும் என்பது இன்று தமிழ் சினிமாவில் நான் இருக்கும் இடத்தில் நான் நன்கு அறிந்ததே. முழு மன திண்மையோடு நான் நடுநிசி நாய்களின் பக்கம் நிற்கிறேன். இந்த வகைப்படங்கள் பார்த்து பழகாதவர்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூற முடி யாத ஒரு படம்தான் இது. இது ஒரு அனுபவம், அவ்வளவே. இறுதியில் என்னுடைய இயக்குநர் கார்டு வரும் முன்பு வரும் இறுதிகாட்சி உங்களுக்கு விளக்கும் இத்திரைப்படத்தை எடுக்க நான் ஏன் முடிவு செய்தேன் என்று. உங்களுடைய ஆதரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாணியும் பல புதிய தலைமுறை இயக்கு நர்களையும் தோற்றுவிக்க வழிவகுக்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: