இந்திய பார் கவுன்சில்(பி.சி.ஐ), நாடு முழுவதிலுமுள்ள சட்டக் கல்லூரிகளுக்கு வழங்கிய இணைப்பு அங்கீகாரங்கள் பற்றி சி.பி. ஐ. விசாரித்து வருகிறது.
கடந்த 5 வருடங்களில் நாடு முழுவதி லுமுள்ள சட்டக் கல்லூரி களுக்கு பி.சி.ஐ. வழங்கிய இணைப்பு அங்கீகாரங்கள் குறித்து சி.பி.ஐ. விசா ரணை நடை பெற்று வருகிறது. காசி யாபாத்திலுள்ள குளோபல் சட்டக் கல்லூரிக்கு தவறான இணைப்பு அங்கீ காரம் வழங்கிய விஷயத்தில் பி.சி.ஐ. உதவி தலைவர் ஆர். தன்பால் ராஜை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
இதனடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட இணைப்பு அங்கீகாரங்களின் நம்பகத் தன்மை பற்றிய விசார ணையில் சி.பி.ஐ. இறங்கி யுள்ளதாக தொடர்புடைய வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு சட்டக் கல்லூரியில் ஆய்வு செய்து, அதைப்பற்றி நல்ல வித மாக சான்றிதழ் கொடுப்பதற்கு பேரம் பேசிய விவகாரத்தில் ஈடுப ட்டதாக டெல்லி பார் கவுன்சில் உறுப்பினர் ஆர்.எஸ். ரானா விற்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய ப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய பார் கவுன்சிலின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளா க்கும் இதுபோன்ற சம்பவங்களால் சட்டக்கல்வியின் தரம் பாதிக் கப்படும் என்று மாணவர் சமூகம் அஞ்சுகிறது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )