Friday, November 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்சுலின் பிறந்த வரலாறு

1889-ம் ஆண்டில் ஆஸ்கர் மின்கோவஸ்கி என்ற ஜெர்மானியர், கணையம் இல்லாமல் ஒரு நாயால் உயிர் வாழ முடியுமா என்று பார்ப் பதற்காக அதன் கணையத்தை அறுத் தெடுத்து நீக்கினார். மறுநாள் அந்த நாய் கழித்த சிறுநீரை ஈக்கள் மொய்த்துக் கொண் டிருந்தன. சிறு நீரில் சர்க்கரை இருந்தது. நேற்று வரை நலமாக இருந்த நாய்க்கு இன்று நீரிழிவு நோய் ஏற்பட்டி ருக்கிறது.    கணை யத்தில் சுரக்கிற ஜீரணச் சாறுகளில் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்தும் ஏதோ ஒரு பொருள் இருப் பதை ஆஸ்கர் உணர்ந்தார். அவர், ஒரு நாயின் கணையத்தில் இருந்து குடலுக்கு ஜீரணச் சாறுகள் செல்லும் நாளங்களை முடிச்சுப் போட்டு அடைத்துப் பார்த்தார். அப்போது கணையம் வற்றிச்சுருங்கியது. ஆனால் நாய் க்கு நீரிழிவு நோய் ஏற்பட வில் லை. குடலுக்கு ஜீரண திரவங் களை அனுப்ப முடியா விட்டா லும் கணையம் நீரிழிவு தடுப்புப் பொருளை உற்பத்தி செய்து கொ ண்டுதான் இருந்தது. ஆகவே அந்த அம்சம் கணையத்தின் ஜீரணச் சாறுகளில் இல்லை என்பது நிச்சய மாயிற்று.

கணையத்தின் சிறிய தீவுச் செல் களைச் சுற்றியுள்ள தந்துகிக் குழா ய்களில் இருந்து ஒரு ஹார்மோன் வெளிப்பட்டு சர்க்கரை எரிக்கப்படுவதை ஒழுங்குபடுத்தக்கூடுமோ என்று ஆய்வாளர்கள் யோசித்தார்கள். ஆனால் அந்த ஹார்மோனை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் பெஸ்ட், பான்டிங் என்ற இருவர் தொடர்ந்து மேற் கொண்ட ஆய்வில் அதைக் கண்டுபிடித்து விட்டனர். அந்த மர்மப் பொருள், நீரிழிவுள்ள நாயின் சிறுநரில் இருந்தும், ரத்தத்தில் இருந்தும் சர்க்கரையின் அளவைக் குறைத்தது. முதலில் `ஜலெட்டின்’ என்று பெயரிடப்பட்ட அந்தப் பொருளுக்கு பின்னர் `இன்சுலின்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படித்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான `இன்சுலின்’ பிறந்தது.

((((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

Leave a Reply