Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலைஞர் டி.வி.-யில், கலைஞர் பற்றிய ….

முன்னணி தொலைக் காட்சிகளுக் கெல்லாம் சவால் விட்டு முன்னேறி விட்ட கலைஞர் தொலைக்காட்சி, மானாட மயிலாட போன்ற கவர்ச்சி நடன நிகழ்ச்சிகளாகட்டும், சரித்திர நிகழ்வு களை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி யாகட்டும் வித்தியாசமான நிகழ்ச் சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வரிசையில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப் பாகி வரும் ரசிகன் என்ற நிகழ்ச்சி 130 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் நிகழ்ச்சியில், தலைவர்களின் வாழ் க்கை வரலாறு, வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது இந்த ரசிகன் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகத் தொ‌டங்கியிருக்கிறது. தொடர்ந்து 15 வாரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டி ருக்கும் இந்நிகழ்ச்சி யில், கலைஞர் பற்றிய தகவ ல்கள், அவருடைய நண்பர்கள் அவரைப் பற்றி தரும் சுவார சிய செய்திகள், கலைஞர் படித்த பள்ளிக்கூடம் மற்றும் உடன் படித்தவர்கள், சிறை யிலே இருந்த காலகட்ட த்தில் உடன் இருந்தவர்களும் நிகழ்ச்சியில் மனம் திறக்கிறார்கள். கலைஞரின் கலை ஆர்வம், மற்றும் கவிதை, கட்டுரை எழுதும் ஆற்றலும் நிகழ்ச்சியில் இடம் பிடிக் கிறது. கிராவிடி என்டர்டெய்ன்மெண்ட் சார்பாக பி.விஜய குமார் தயாரித்து வழங்க, மணிவண்ணன் இயக்குகிறார்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: