Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பீன்ஸ், தக்காளி, முள்ளிங்கி விலை சரிவு

காய்கறி வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விலை குறைந்து கொண்டே வருகிறது. நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் விலை இருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.வடக்கு உழவர் சந்தை அலுவலர் ராமலிங்கம் கூறிய தாவது: திருப்பூர் சுற்று வட்டா ரத்தில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்து வருவதால் விலை குறைந்து கொண்டே வருகிறது. கத்தரி, கொத்தவரக்காய், மல்லித்தழை விலை உயர்ந்துள்ளது. வெண்டைக்காய், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், தக்காளி, முள்ளங்கி விலை குறை ந்துள்ளது. தக்காளி கிலோ 5; பீட்ரூட் 20; அவரை 16 முதல் 18; கத்தரி க்காய் ஐந்து ரூபாய் உயர்ந்து 30; வெண்டைக்காய் 18; புடலை 16; பீர்க்கங்காய் 20; சுரைக்காய் 10; பாகற்காய் 14 முதல் 16; கொத்தவர க்காய் 18; பூசணி 10; அரசாணி 10; பச்சமிளகாய் சம்பா 12; உருண்டை 16; சின்ன வெங்காயம் 28 முதல் 36; பெரிய வெங்காயம் 18; தேங்காய் 18; உருளை 18; கேரட் 30; பீன்ஸ் சாதா 20; புஸ் பீன்ஸ் 25; முட்டைகோஸ் 16; வெள் ளை முள்ளங்கி 8; சிவப்பு முள்ளங்கி 10; மல்லித் தழை 12; கீரை 12; புதினா 12; கறிவேப்பிலை 50; வாழைக்காய் 18; எலுமி ச்சை 40; வாழைப்பழம் 18 முதல் 24; இளநீர் 12 முதல் 15 என விற்பனையானது, என்றார். பூ விலை குறைவு: பூ வியாபாரிகள் சங்க செயலாளர் சக்திவேல் கூறுகையில், ”பனி காலம் முடிந்து வெயில் துவங்கியுள்ளதால் பூ சாகுபடி வரும் நாட்களில் அதிக ரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. வரத்து அதிகரிக்கும் போது விலையும் தானாகவே குறையும். இனி, முகூர்த்த நாட்கள் குறைவு என்பதால் தேவை மிகவும் குறையும். கடந்த வாரத்தில் முகூர்த்த நாட்கள் அதிகம் என்பதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது விலை குறைந்துள்ளது. நேற் று, மாலை பெரியது 120; சிறியது 30 முதல் 35; பெங் களூரு மல்லிகை புதுப்பூ 80; பழையது 50 முதல் 60; அரளி 30; பட்டுப்பூ 40 முதல் 50; செவ்வந்தி 60; சம்பங்கி 80; ஜாதிமுல்லை 200; மல் லிகை 120 என விற்பனை யானது,” என்றார். புளி விலை உயர்வு: திருப்பூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலை வர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ”சாயத்தொழில் பிரச்னை, திருப்பூரில் மளிகை வியாபாரத்தையும் பாதித்துள்ளது. மளி கை பொருட்கள் வாங் கும் அளவு குறைந்து வருகிறது. புளிக்கு ஐந்து ரூபாய், பச்சைப் பயிறு, தட்டை பயிறு மற்றும் துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் இரண்டு ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கரும்பு சர்க்கரை கிலோ 30; சுண்டைக்கடலை 42; புளி 70 முதல் 80; வரமிளகாய் 100 முதல் 110; அஸ்கா 30; பச்சைப் பயிறு 62; பாசி பருப்பு 75; துவரம் பருப்பு 65 முதல் 72; கருப்பு உளுந்து 68; உருட்டு உளுந்து 75; தட்டை பயிறு 40, கொள்ளு 22; கடலை பருப்பு 40 ரூபாய் என விற் பனையானது,” என் றார். தேங்காய் எண்ணெய் விலை உயர்வு: திருப்பூர் ஆயில் வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரன் கூறுகையில், ”தேங் காய் எண்ணெய் விலை கிலோவுக்கு எட்டு ரூபாய் உயர்ந்துள்ளது. விளக்கெ ண்ணெய் மற்றும் நெய் 10 ரூபாய் விலை உயர்ந் துள்ளது. பாமாயில் 66; தே. எண்ணெய் 108; க.எண்ணெய் 88; ரீபண்ட் ஆயில் 96; சூரிய காந்தி 84; நல்லெண் ணெய் ஐந்து ரூபாய் குறை ந்து 85; விளக் கெண்ணெய் 150; நெய் 290 என விற்பனை யாகிறது,” என்றார்.

((((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: