Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய 150 ரூபாய் நாணயம் விரைவில் உங்கள் கைகளில்…

நமது நாட்டில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு 150 ஆண்டுகளை குறிக்கும் வண்ணம் வரும் 28ம் தேதி 150 ரூபா ய் நாணயம் வெளியிடப்படு கிறது. இந்தியாவின் வருமான வரித் துறை 1860ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2010ம் ஆண்டுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்து ள்ளது. இந்தி யாவின் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையும் தொட ங்கி 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் ரூ.150 நாணயம் வெளியிட நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரத் துறை முடிவு செய்துள்ளது. 150 ரூபாய் நாணயம், வெள்ளி, செப்பு, துத்தநாகம், ஈயம் ஆகியவற்றின் கலப்பில் செய்யப்படும். ஒரு பக்கத்தில் இந்தியாவின் வரை படமும், மற்றொரு பக்கத்தில் சத்திய மேவ ஜயதே என்ற முழக்கமும் பொறி க்கப்பட்டிருக்கும். இதே முன் பின் வடிவத்துடன் 5 ரூபாய் நாணயம் ஒன் றையும் வெளியிட முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்விரண்டு நாணய ங்களையும் வரும் திங்கட்கிழமை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய் வதற்கு முன்னர் நிதியமை ச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: