Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாருதி சுசூகி நிறுவனம்: ‘SL-4’ கார் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனம், டீசலில் இயங்கும் ‘எஸ்.எக்ஸ்-4 டீசல் சூப்பர் டர்போ’ என்ற புதிய காரினை டில்லியில் நேற்று அறிமுகப் படுத்தியது. மாருதி சுசூகி நிறுவனம் சார்பில், ‘எஸ்.எக்ஸ்-4’ என்ற பெட்ரோல் மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார் விற்பனை செய்ய ப்படுகிறது. டீசலி ல் இயங்கும், ‘எஸ்.எக்ஸ்-4 டீசல் சூப்பர் டர்போ’ கார் அறிமுக விழா டில்லியில் நேற்று நடந்தது. மாருதி சுசூகி நிறுவன மேலாண் இயக்குனர் சின்ஷோ நகநிசி, மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு மேலா ண்செயல் அதிகாரி மயாங்க் பரீக் புதிய காரினை அறிமுகப் படுத்தினர். இந்நிகழ்ச்சியின் போது அவர்கள் கூறியதாவது: டீசலில் இயங்கும் எஸ்.எ க்ஸ்-4 கார், சூப்பர் டர்போ டி.டி.ஐ.எஸ். இன்ஜின் பொரு த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு 21.5 கி.மீ., மைலேஜ் தரக்கூ டியது. காரிலிருந்து வெளி யாகும் புகை தொடர்பான பிரச்னைகளை அடையாளம் கண்டு, டிரைவருக்கு தெரிவி க்கும் ‘ஓ.பி.டி. 2’ வசதியை கொண்டது.சென்னையில் புதிய கார், வி.டி.ஐ., மாடல் ஏழு லட்சத்து 90 ஆயிரத்து 352 ரூபாய், இசட்.டி.ஐ. மாடல் எட்டு லட்சத்து 78 ஆயிரத்து 355 ரூபாய், இசட்.டி.ஐ., (லெதர்) மாடல் ஒன்பது லட்சத்து 12 ஆயிரத்து 442 ரூபாய் விலையில் விற்பனை செய் யப்படும். வரும் 2020ம் ஆண்டு வரை மோட்டார் வாகன துறைக்கு சிறப் பான எதிர்காலம் உள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் அனைத்து கார்களின் எரிசக்தி சிக்க னத்தை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. தற்போது கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. நிறுவனத்தின், குர்கா னில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் எட்டு லட்சத்து 50 ஆயிரம் கார்களும், மானேசர் தொழிற் சாலையில் மூன்று லட்ச த்து 50 ஆயிரம் கார்களும் என 12 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: