Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.ஜி.ஆர். சமாதியை உடைத்த வாலிபர் கைது; கடற்கரையில் பரபரப்பு

சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எம்.ஜி. ஆர் சமாதிக்கு சென்று சுற்றிப் பார்ப்பது வழக்கம்.எம்.ஜி.ஆர் பயன் படுத்திய வாட்ச், எம்.ஜி.ஆரின் சமாதிக்குள்ளே யே உள்ளது. எம்.ஜி.ஆர்.  இற ந்து 24 வருடங்கள் ஆகியும் அந்த கடிகாரம் இன்னும் ஓடிக் கொண்டிருப்ப தாக எம்.ஜி. ஆரின் ரசிகர்களும், பொது மக்களும் நம்புகிறார்கள்.

எம்.ஜி.ஆர் சமாதியை பார்க்க வருபவர்கள் சமாதி மேல் காதை வைத்து கடிகார ஒலி கேட்கிறதா என்று பார்ப்பது வழக்கம்.இந்த நிலையில் இன்று காலை எம்.ஜிஆர். சமாதியில் உள்ள சிலாப்பை வாலிபர் ஒருவர் உடைத்துக் கொண்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சமாதியை உடைத்துக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து கொண்டு சென்று விசாரித் தனர். அப்போது அந்த வாலிபரின் பெயர் ராமச்சந்திரன் என்றும் திருத்தணியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, எம்.ஜி.ஆர். பிறந்தநாளின் போது நான் பிறந்ததால் எனக்கு ராமச்சந்திரன் என்று தனது தந்தை பெயர் வைத்துள்ளார். சென்னை வந்த போது வாட்ச் கட்ட மறந்து விட்டேன். எம்.ஜி.ஆர். சமாதிக்குள் வாட்ச் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வாட்சை எடுப்பதற்காக சமாதி யை உடைத்தேன் என்று கூறினார்.
திடீரென அவர் ராமச்சந்திரன் நான் உயிரோடு இருக்கிறேன். எனக்கு ஏன் சமாதி கட்டினார்கள் என்று கூறினார். அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.
பின்னர் அதிகாரிகள் எம்.ஜி.ஆர். சமாதிக்கு விரைந்து சென்று உடைக்கப்பட்ட பகுதியை சீரமைத்தனர். இந்த சம்பவத்தில் மெரினா கடற்கரை பகுதியில் பரபரப்பு நிலவியது. எம்.ஜி.ஆர். சமாதிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: