Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏக்தா கபூர் Vs. வினு சக்கரவர்த்தி சில்க்ஸ்மிதாவுக்காக…

சில்க் கதையை படமாக எடுக்கக் கூடாது என்று சொல்லும் வினு சக்கரவர்த்திக்கும், சில்க்குக்கும் என்ன சம்பந்தம் என்று? பிரபல பாலிவுட் தயாரிப் பாளர் ஏக்தா கபூர் கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து வருபவர்தான் இந்த ஏக்தா கபூர். சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை யாரும் படமாக எடுக்கக் கூடாது என்று மாஜி நடிகர் வினு சக்கரவர்த்தி சமீபத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சில்க்கை திரையுலகிற்கு அறிமுகப் படுத்தியதே நான்தான். அவரது கதையை படமாக எடுப்பதற்கு எனக்குத்தான் உரிமை இருக்கிறது. மீறி படம் எடுத்தால் தடை உரிமை கோருவேன் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் அதிரடி பேட்டியளித்திருக்கிறார். அதில், சில்க்குக்கு ரத்த சம்பந்தமான உறவாக இருந்திருந்தால் இப்படி தடை கோருவதற்கு உரிமை இருக் கிறது. அப்படியில்லாத வினு சக்கரவர்த்தி எப்படி இந்த விஷயத்தில் மூக்கை நுழைக் கலாம்? ஒரு பைசா கூட நான் அவருக்கு தர மாட்டேன், என்று கூறியுள்ளார்.

“நான் பணமே கேட்கல. அப்படியிருக்கும்போது எப்படி சம்பந்தம் இல்லாமல் பணத்தை பற்றி பேசலாம்? இந்த படத்தை எப்படி வெளியிடு றாங்கன்னு பார்க்கிறேன். நானும் மும்பைக்கே போய் பெரிய லாயரை வச்சு மூவ் பண்ணுவேன். என்னை அவ்வளவு சாதாரணமா நினைச் சுட்டாங்களா? விட மாட்டேன்” என்கிறார் வினு சக்கரவர்த்தி. ம்…! இவங்க ரெண்டு பேரு  சண்டை யால பாதிக்கப்படப் போவதென்னவோ சில்க் வாழ்க்கை வரலா ற்றை பார்த்து தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கும் ரசிகர்கள் தான்!

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

 

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: