Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க… : இயக்குனர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோபி பெரியார் திடலில் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக மக்கள் இன்று உரிமைகளை இழந்து நிற்கின்றனர். நீதி மன்றம் தடைவிதித்து இருப்பினும் நம் கண் முன்னே ஆற்று மணல் கடத்தப் படுகிறது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் மணல் அள்ள அரசு தடை விதித் துள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு மணல் கடத்தப் படுகிறது. நெல் முளைத்த பூமியில் கல் முளைத்து நிற்கிறது. விவசாய நிலங்களை பொருளாதார மண்டலங் களுக்காக கையகப்படுத்துகிறார்கள்.
நெல்லும், பருப்பும் பூமியில் தான் விளைய வைக்க முடியும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வில்லை.   கள்ள ஓட்டு சர்வ சாதாரணமாகி விட்டது. எனவே வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க இங்குள்ள ஓட்டுச்சாவடி மையங் களில் வெளிமாநில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஈழத் தமிழர்களை அழிக்க உதவிய காங்கிரஸ் கட்சிதான் எங்கள் எதிரி. ஆகவே சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரையும் ஆதரிப் போம். இவ்வாறு அவர் கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: