Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக்…

பேஸ்புக் என்பது நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்துவரும் வரும் இணைய தளம். தனி தளமாக ஒப்பீடு செய்தால் இது கூகுளையே பின்னுக்கு தள்ளிவிடும்.

நாம் இந்த பேஸ்புக் மற்றும் ஜிமெயி லையும் உபயோகித்தால் இவை இரண்டையும் தனித்தனியாக திறந்து பார்க்க வேண்டும். ஆனால் பேஸ் புக்கை நம்முடைய ஜிமெயில் கணக்கில் இணை த்து விட்டால் பேஸ்புக் தளத்திற்கு வராமலே ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம்.

இதனால் ஜிமெயிலில் இருந்தே நண்பர்களின் பதிவிற்கு கருத் துரைகள் இடலாம். நம் விருப்பங்களையும் தெரிவிக்கலாம்.

இந்த வசதிகளை உங்கள் ஜிமெயில் கணக்கிலும் கொண்டு வர முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

பின்னர் Settings – Labs க்ளிக் செய்யவும் உங்களுக்கு வரும் விண்டோவில் Enabled Labs பகுதியில் Enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்யுங்கள்.

மேலே செய்த மாற்றத்தை சேமித்தவுடன் அடுத்து Gadget டேபை க்ளிக் செய்யவும். அங்கு வந்திருக்கும் விண்டோவில் கீழே உள்ள URL காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.

http://hosting.gmodules.com/ig/gadgets/file/104971404861070329537/facebook.xml பேஸ்ட் செய்த வுடன் அதற்கு அருகே உள்ள Add என்ற பட்டனை க்ளிக் செய் தால் போதும் பேஸ்புக் உங்கள் ஜிமெயில் கணக்கில் சேர்ந்து விடும்.

இப்பொழுது நீங்கள் ஜிமெயிலை Refresh செய்யுங்கள். இப்பொழுது ஜிமெயிலின் Chat பகுதிக்கு கீழே பாருங்கள் பேஸ்புக் விட்ஜெட் சேர்ந்து இருக்கும். அதில் உள்ள Expand என்பதை க்ளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் அதில் Allow என்பதை கொடுத்து விட்டு பின்பு உங்கள் பேஸ்புக் ID, Password கொடுத்து உள்ளே நுழைந்து உங்கள் பேஸ்புக் கணக்கை ஜிமெயிலிலே திறந்து பார்க்கலாம்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: