சி.என்.என்.-ஐ.பி.என். வழங்கியது: தமிழ்நாட்டுக்கு சிறந்த மாநில விருது; முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் தங்கம் தென்னரசு கா
ண்பித்தார்

தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறி ப்பில் கூறி இருப்பதா வது:-
சி.என்.என். – ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008 ஆம் ஆண்டு முதல் தேசிய அள வில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங் களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங் களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து, அம்மாநிலங்களுக்கு “வைர மாநில விருதுகள்” வழங்கி வருகிறது.
2010ஆம் ஆண்டிற்கு 9 பிரிவுகளின் கீழ் வைர மாநில விருது களும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங் களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில், தமிழ்நாடு- இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும்; குடிமக்கள் பாது காப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருது களையும் பெற்றுள்ளது.
சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் சார்பில் நேற்று புது டெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்த விருதுகளை குடிய ரசுத் துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கினார். அப்போது முதலமைச்சர் கருணாநிதிக்கு தமது வாழ்த்துக் களையும், பாராட்டுகளையும் தெரிவிக்குமாறு கூறினார்.
சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் வழங்கிய இந்த விருது களை முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு காண்பித்தார். அப்போது, நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க. அழகிரி, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்
இதயத்தில் இணைக்கிறோம்