மொபைல் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நோக் கியா நிறுவனம், புதிதாக ‘நோக் கியா எக்ஸ்3-02’ மற்றும் ‘நோக் கியா சி3-01’ ‘டச் அண்டு டைப்’ வகை மொபைல் போன் களை அறிமுகம் செய்தது. இது குறித்து இந்நிறுவனத்தின் பொது மேலா ளர் (தென் மண்டலம்) டி.எஸ். ஸ்ரீதர் கூறியதாவது: நோக்கியா வின் ‘எக்ஸ்3-02 ‘ மற்றும் ‘சி3-01′ வகை டச் அண்டு டைப்’ மொபைல் போன்கள், தொடு திரை மற்றும் டைப்பிங் ஆகிய இரு வசதிகளை வழங்கும் வகையில், மிகச்சிறந்த முறையில் வடிவ மைக்கப்பட்டுள்ளன.இவ்வகை மொபைல்கள், மெகா பிக்சல் கேமரா, பேஸ் புக், மை ஸ்பேஸ், மியூசிக் ப்ளேயர், எப்.எம். ரேடியோ மற்றும் மின் அஞ்சல் அனுப்பும் வசதிகளை கொண்டுள்ளது. இவ்வகை மொபைல் போன்களை அறிமுப் படுத் தியதன் மூலம், உலக வாடிக்கையாளர்களின் விரல் நுனிகளு க்குள் கொண்டு வந்துள்ளோம். மேலும், எங்களின் வாடிக்கை யாளர் களுக்கு, மதிப்பு கூட்டப்பட்ட சேவையை வழங்க வேண் டும் என்பதை முக்கிய இலக்காக கொண்டு செயல் படுகிறோம். வர்த்தக சந்தைகளில், ‘நோக்கியா சி3-01’ வகை மொபைல் போன் விலை 9,389 ரூபாயாகவும் மற்றும் ‘நோக்கியா எக்ஸ்3-02’ மொபைல் போன் விலை 8,839 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )