Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனிதர்கள் 1235 கோள்களில் வாழலாம்- நாசா

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்று விடுகிற நமது சூரியன் போல சின்ன தும், பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொ ண்ட பிரமாண்ட ஏரியா பால் வழித் திரள்(கேலக்சி) எனப்ப டுகிறது.

மிக மிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலை வுகள் ஒளியாண்டு அடிப்ப டையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ வேகத்தில் போனால் கூட கேலக்சியின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் போவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.

இந்த கேலக்சி ஏரியாவில் பூமி, புதன், சனி போல 5 ஆயிரம் கோடி கோள்கள் இருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் சுமார் 50 கோடி கோள்களில் அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத மனிதர்கள் உயிர்வாழ உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய கெப்ளர் விண் கலம் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இத்தகவல்கள் தெரிய வந்துள்ளது. கெப்ளர் விண்கலம் இதுவரை அனுப்பிய லட்சக் கணக்கான புகைப்படங்களை ஆராய்ந்ததில் 1235 கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கின்றன.

54 கோள்களில் ஏற்கனவே மனிதர்கள், உயிர்கள் இருந்திருக் கக்கூடும். கோள்களில் மனித உயிர்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. அண்ட வெளியில் உள்ள கோள்கள் குறித்து காஸ்மிக் கணக்கெடுப்பு நடத்துவதே ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் என்று கெப்ளர் விண்கலத்தின் தலைமை ஆராய்ச் சியாளர் வில்லியம் பெரூக்கி கூறியுள்ளார்.

மேலும் பல புதிய கிரகங்கள், மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய தொடர் ஆய்வில் தெரிய வரும்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: