Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூளை செல்களை அழிக்கும் கைபேசிகள்

கைபேசிகளை உபயோகிப்பது மூளையை பாதிக்கும் என்றும், மூளை செல்களை அழிக்கும் என் றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரி க்கின்றனர்.

இதுதான் புற்றுநோய் போன்ற நோய் கள் உருவாகவும் காரண மாக அமைகிறது. நூற்றுக்கணக்கான கை பேசி உபயோகிப்பவர்களிடம் நடத் திய ஆய்வில் ஒவ்வொரு அழைப்பின் போதும் வெளிப் படும் சிக்னல்கள், மூளையின் இரசாயன மாற்றங்களை 7 சதவீதமாக அதிகமாக்குகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

இத்தகைய “மூளை மெட்டாபாலிசம்” கைபேசிகளின் ஆன்ட னாவை தலைக்கு அருகி லோ, முகத்திற்கு அருகிலோ படும்படி வைத்தால் உண்டா கிறது. கைபேசிகள் கதிர் வீச்சை வெளியிடுவதாக வும், அவை மூளை செல் களின் வெப்பத்தை அதிகப் படுத்தவதாகவும் ஏற்கனவே ஆராய்ச்சிகள் தெரிவித் துள்ளன.

தூங்கும் போது தலைக்கு அருகில் கைபேசிகளை வைத்து தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைபேசி நிறுவனங்களுமே இதைத்தான் பரிந்துரை செய்கின்றன.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: