உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை சுண்டி இழுத் துள்ள நிலையில் பெங்க ளூரூவில் நடக்கும் போட் டிக்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் குவிந்ததால் கூட்டத்தினரை கட்டுப் படுத்த போலீசார் தடி யடி நடத்தி கலைத்தனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் உலக கோப்பை நடக்கிறது. கிரிக்கெட் இந்தியா – இங்கிலாந்து மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் பலர் மிக ஆர்வத்துடன் காத்து இருக் கின்றனர். இந்த போட்டிகான டிக்கெட் இன்று இந்த ஸ்டேடி யத்தில் விற்பனை நடந்தது. இதற்கென நேற்று நள்ளிரவு முதல் ரசிகர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். கவுன்டர் துவங்கிய சில மணி நேரத்திலேய டிக்கெட் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதனால் ரசிகர்கள் பலர் ஏமாற்றமுற்று அல்லாடினர்.
இந்நேரத்தில் கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் நாலாபுறமும் சிதறி ஓடினர். போலீசா ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் பரபரப்பு நிலவியது. பலர் அடிபட்டு ஓடுவது பரிதாபமாக இருந்தது.
இந்த மைதானத்தை பொறுத்தவரை 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கமுடியும். ஆனால் 4 ஆயிரம் டிக்கெட் மட்டும் விற்ப னைக்கு வந்தன. இதனால் பலருக்கு கிடைக்காமல் போனது. ஏனைய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், பிளாக்கிலும் விற்க ப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் போட்டி நடத்தும் கர்நாடக அமைப்பினர் மீது உலக கோப்பை கிரிக்கெட் மத்திய கமிட்டிக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )