விஷால்-சமீரா ரெட்டி இணைந்து நடிக்கும் படத்தில், பிரபுதேவா இயக்கத்தில் சின்னக்கலைவாணர் விவேக் நடிக்கிறார்.
பரிமளா திரையரங்கம் படத்தில் திருட்டு டி வி டி டீலராக வருகிறாராம். மேலும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, இத்த னை நாளாய் எங்கிருந்தாய்,நான்கு மறை தீர்ப்பு ஆகிய படங் களில் பிஸியாக விவேக் நடிக்கிறார்.
டன் படத்தில் போலிசாமியார் வேடத்தில் நடித்துள்ளார். ‘அமெரி க்காவுக்கு முக்கியம் ஒபாமா, உனக்கு முக்கியம் உங்க அப்பா அம்மா’ பன்ச் டயலாக் அடித்தும் காமெடி பண்ணியிருக் கிறாராம்.
ஹீரோ தனுஷ் உடன் விவேக் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் தான் இந்த சீடன். ‘தனுஷ்’ ஒரு புரிஞ்சிக்க முடியாத கேரக்ட ருங்க. பெரியவங்கள மதிக்கி றவர்தான், நடிப்புன்னு வந்திட்டால் காமெடி யனையும் தூக்கி சாப்பிட பார்ப் பாருங்க. சினிமா உலகில் எம்.ஜி.ஆர் பாணியில் செயல் படுகிற வர்களில் இவரும் ஒருவர்’ என்கிறார்.
‘சீடன் படத்தில் வரும் காமெடி காட்சி ஒருத்தர், அவர் பையனை கூட்டிட்டு வந்து, என்னிடம் ‘ இவன் வளரவே மாட்டே ங்கிறான்…’ என்று புலம்புவார். ‘ஊழல்னு பேர் வை, நல்லா வளர்வான்’ என்று நானும் ‘டைமிங்கா’ அடித்து விடு வேன்’ என்று படத்திற்காக அரசி யல் காமெடியை அள்ளி விட்ட தையும் சொல்லியிருக்கிறார்.
இன்றைய கோலிவுட்டில் வளர்ந்து வரும் காமெடியன்களையும் கவனித்து வரும் விவேக், தனது வழக்கமான பாணியிலிருந்து புதிதாக காமெடி நடிப்பை வெளிப்படுத்தியும் ரசிகர்களை சிரிக்க வைப்பாராம்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்