Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒன்பது நாள் குழப்பம் முடிவு: ஒருவழியாக கலெக்டர் விடுதலை

ஒடிசாவில் நக்சலைட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் கிருஷ்ணா விடுவிக்கப்பட்டார். ஒடிசாவில், மால் காங்கிரி மாவட்ட கலெக்டராக பணி  யாற்றும் வி.கிருஷ்ணா, இன்ஜினியர் பபி த்ரா மஜி ஆகியோரை கடந்த 16ம் தேதி நக்சலைட்கள் கடத்திச் சென்றனர். இவர் களை விடுவிக்க வேண்டுமெனில், “சிறையில் உள்ள எங் கள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 700 பேரை விடு விக்க வேண்டும்; எங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்’ என, நிபந்தனைகள் விதித்தனர். தங்களின் சார்பில், அரசிடம் பேசுவதற்காக ஆந்திராவைச் சேர்ந்த பேரா சிரியர்கள் ஹர்கோபால், சோமேஸ்வர் ராவ் ஆகியோரை மீடியே ட்டர்களாக ஏற்பாடு செய்தனர்.

நக்சலைட்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக ஒடிசா அரசு அறிவித்தது. சிறையில் உள்ள நக்சலைட் அமைப் பின் மூத்த தலைவர்கள் காந்தி பிரசாத், ஸ்ரீனிவாசலு, பத்மா உள்ளிட்டோரை ஜாமீனில் விடுவிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது. இதையடுத்து, 48 மணி நேரத்துக்குள் கலெக்டரையும், இன்ஜினியரையும் விடுவிப் பதாக நக்சலைட்கள் தெரிவித்தனர். இந்நிலையில், காந்தி பிரசாத் துக்கு ஒடிசா ஐகோர்ட் ஜாமீன் அளித்ததையடுத்து, அவர் கோராபு ட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டார். திடீர் திருப்பமாக, இன்ஜினியர் பபி த்ரா மஜியை மட்டும், நக்சலைட்கள் நேற்று விடுவித்தனர். அவரிடம் புதிய நிபந்த  னைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் கொடுத்து அனுப்பி யிருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கலெக்டர் கிருஷ்ணா வை அவர்கள் விடுவிக்கவில்லை.

அதிருப்தி: இது குறித்து பேராசிரியர் ஹர்கோபால் கூறியதாவது: நக்சலைட்கள் புதிய நிபந்தனைகளை விதிப்பர் என, நாங்கள் எதிர் பார்க்கவில்லை. இது எங்களுக்கே ஆச்சர்யம் அளிக்கிறது. புதிய நிபந்தனைகள் அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. கலெக்டர் கிருஷ்ணாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என, நக்சலை ட்களிடம் வலியுறுத்தி உள்ளோம். காந்தி பிரசாத் தவிர, பத்மா, ஸ்ரீனிவாசலு உள்ளிட்ட ஐந்து பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், சுவாமி அக்னி வேசை பேச்சுவார்த்தையில் இணைத்துக் கொள்ளும்படியும் நக்சலைட்கள் வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் இந்த நிபந் தனைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஹர்கோ பால் கூறினார்.

இந்நிலையில், நக்சலைட் ஆதரவாளரான வரவர ராவும், கலெ க்டரை விடுவிக்க வேண்டும் என, நக்சலைட்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோள், ரேடியோ மூல மாக ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அடிக்கடி ஒலி பரப்பப்பட்டது. நக்சலைட்கள் ரேடியா கேட்கும் வழக்கத்தை உடையவர்கள் என்பதால், அரசு அதிகாரிகள் இந்த நடவடிக்கை யை மேற்கொண்டனர்.

விடுதலை: இதனால், கலெக்டர் விடுதலையாவதில் நெருக்கடி நீடிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலை யில், இன்று மாலை, மால்காங்கிரிக்கு சென்ற நக்சலைட்கள் ஆதரவாளர்கள் சிலர், கலெக்டரை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை, நக்சலைட் களிடம் வலியுறுத்தினர். இதைத் தொட ர்ந்து, மால்காங்கிரி மாவட்ட த்தில் உள்ள டோலி அம்பாரி என்ற கிராமத்தில், கிராம மக்கள் மற்றும் உள்ளூர் மீடியாக்கள் முன்னிலையில், கலெக்டர் கிருஷ்ணாவை, நக்சலைட்கள் விடு வித்து விட்டுச் சென்றனர். இது தொடர்பான வீடி யோ காட்சிகள், உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. கலெக்டர் விடுதலை யான தகவல் கிடைத்ததும், மால்காங்கிரியில் அவரது வீட்டுக்கு முன் திரண்ட பொதுமக்கள், பட்டாசு வெடித்தும், ஆடிப் பாடியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். கலெக்டர் விடுவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஒன்பது நாட்களாக நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. கலெக்டர் நல்ல உடல் நலத்து டன் இருப்பதாக கூறப்பட்டது. ஒடிசா மாநில அரசும் நிம்மதி அடைந்துள்ளது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: