Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வதந்தியால், அலறும் திரிஷா

வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர் நடிகை திரிஷா. தொழி லதிபருடன் காதல், ரகசிய திருமணம் என்று அவரைப் பற்றிய வதந்திகள் வந்து கொண் டுதான் இருக்கின்றன. ஆனால் ஒவ் வொரு வதந்தியையும் தகர்த்து ஒன்பது வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலை யில் திரிஷாவை பற்றி புது வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது, அவருக்கு தொழிலதிபருடன் திரு மணம் நடந்து குழந்தை இருப்பதாக வதந்திகள் பரவத் தொட  ங்கியுள்ளன.

தமிழில் அஜீத்துடன் “மங்காத்தா” படத்திலும், தெலுங்கில் “தீன் மார்” படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் ரீலசாக இருக் கிறது. இந்நிலையில் தனக்கு திரும ணம் நடந்து இருப்பதாக பரவிய வதந்தி யால், தன்னுடைய சினிமா வாழ்க்கை பாதிக்கும் என்று அச்சப்படுகிறார்.

இந்நிலையில் சூட்டிங்கில் இருந்த திரிஷாவிடம் இதுகுறித்து கேட்ட போது அலறிவிட்டார். அவர் கூறிய தாவது, எனக்கு அரசி யல் புள்ளி ஒருவரின் மகனுடன் திருமணம் நடந்து விட்டதாக வதந்திகள் கிளம்பியது. இப்போது தொழில் அதிப ருடன் திரு ணம் செய்து கொண்‌டதாக வதந்தி. ஆனால் இதனை பலமுறை மறுத்து விட்டேன், ஆனாலும் தொடர் கிறது. அதுகூட பரவா யில் லை எனக்கு குழந்தை இருப்பதாக கூட சிலர் வதந்திகள் பரப்புகின்றனர். நான் யாரை யும், ரகசிய திருமணம் செய்ய வில்லை, அவ்வாறு செய்ய என க்கு அவசியமும் இல்லை. எனது திருமணத்தை ஊர் அறிய உலக றிய நடத்துவேன். கண்டிப்பாக ரகசிய திருமணம் செய்ய மாட்டேன் என்று கோபத்துடன் கூறி னார்.

(( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி  ))

Leave a Reply