Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உணவில் அதிகம் உப்பு சேர்ப்பவரா நீங்கள்! எச்சரிக்கை

Pillar of Salt

“உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீத த்தினர் உயர் ரத்த அழுத்த த்தால் பாதிக்கப்பட் டுள்ள னர். எனினும், மேற் கத்திய நாடுகளில், பாதிப்ப டைபவர்களின் எண்ணி க்கை குறைந்து வருகிறது.

இந்தியாவில் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது’ என, ஒரு ஆரா ய்ச்சி தெரிவிக்கிறது. இந்த முடிவு கவலையளிப்ப தாக உள்ளது.

காரணம், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவி ட்டால், இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறு நீரகச் செயலிழப்பு, ரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறி போதல் ஆகி யவை ஏற்ப டும்.

நினைவுத் திறனும் குறை ந்து, சீரான சிந்தனை தடை படும். இரு பது வயதை அடைந்து விட்டாலே, இர ண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட் டால், ஆண்டுதோறும், ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக் கமாக கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் என்பது, ரத்த நாள த்தின் மீது, இதயத்திலிருந்து வெளி யேறும் ரத்தம் பாயும் வேகத்தை குறிக் கும்.

இது, இரண்டு வகையிலான அளவில் கணக் கெடுக்க ப்படுகிறது. ஒன்று, இதயம் சுருங்கும் போது வெளி யேற்றப்படும் ரத்தம் ஏற்ப டுத்தும் அழுத்தம் (சிஸ்டோலிக்) மற்றொன்று, இதயத்தின் கீழறைகள் விரியும் போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழு த்தம் (டயஸ்டோலிக்.) அதாவது, 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு. 139/89 என்பது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவ தற்கான முந்தைய நிலை; 140 /90 என்ற அளவோ, அதற்கு மே லோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்ட நிலையை குறிக் கிறது. வயது ஏற ஏற, ரத்தக் குழாய்கள் நெகி ழ்ந்து கொடு க்கும் தன்மையை இழந்து தடித்து விடுகின்றன.

இந்த பாதிப்பு ஏற்படும் போது, சிஸ்டோலிக் அழுத்தம் மட்டும் அதிகரித்து காணப்படும். 60 வயதை தாண்டிய 70 சதவீதத்தின ருக்கு, இது போன்ற ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

வயது அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு, பாரம்ப ரியமாக ரத்த அழுத்தம் ஏற்படும் தன்மை, சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய், சுரப்பி நோய்கள், புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கார்ட்டிகோஸ்டிராய்டு, கருத் தடை மாத்திரைகள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள் சாப்பி டுவது ஆகியவை, ரத்த அழுத்த த்தை அதிகரிக்கும். பிறப்பி லேயே ரத்தக் குழாய்கள் சுருங்கி காணப்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.

எந்த காரணமும் இன்றி, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால், அத ற்கு, “எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்’ என்று பெயர். இதனால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, அவசியம் மருந்து உட் கொள்ள வே ண்டும். “சிஸ்டோலிக்’ வகை உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குக் கூட மருந்து உட்கொள்ளுதல் அவசியம்.

உணவில் சேர்க்கும் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால், உயர் ரத்த அழுத்தம் ஏ ற்படும். சிலருக்கு, சிறிய ளவில் உப்பு சேர்த்து கொண் டாலே, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில், 20 சதவீத த்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீரான உடல் நிலையில் உள்ளவர்கள் தின மும், 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர் த்து கொள்ளலாம் என பரிந்துரை க்கப் படுகிறது.

நான்கு பேர் கொண்ட குடும்ப த்திற்கு, நாள் ஒன்றுக்கு, மொ த்தமாக தேவைப்படும் உப்பு, 4 டீஸ்பூன் தான். உப்பு அள வை கணக் கிடும் போது, உணவில் இயற்கையாகவே உள்ள உப்பையும் கணக் கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா உணவிலும் – குடி நீரில் கூட, இயற்கை உப்பு உள்ளது.

எல்லா வகையான உணவு தயாரிப்பிலும், ஏதாவது ஒரு வகை யான உப்பு சேர்க் கப்படுகிறது. மோனோ சோடியம் க்ளூடாமேட், சோடியம் நைட்ரைட், சோ டியம் சாச்சரின், சோடியம் பைகார் பொனேட் (பேக்கிங் சோடா), சோடியம் பென்சொயேட் ஆகிய ஏதாவது ஒரு உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ், ஊறு காய் வகைகளில் சேர்க்கப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, இறைச்சியை உள்ள டக்கி செய்யப்படும் பலகாரங்கள், பர்கர், பிட்சா ஆகியவ ற்றில், அதி களவு உப்பு சேர்க்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தைச் சீராக்க, நிறைய மருந்துகள் தற்போது கிடைக் கின்றன. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, இவ்வகையான மருந் துகளையும் சிறியளவில் உட் கொண்டு வந்தால், ரத்த அழுத்த த்தைக் கட்டுக் குள் வைத்திருக்க முடியும்.

இதற்கு சுய முயற்சி தேவை. பல மருத்துவர்களும், நோயாளி

Pillar of Salt

களும், மாத்திரையின் அளவைக் கூட்டிக் கொள்வதோடு சிகிச்சை முடிந்ததாக கருதுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்… வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது, மாத்திரை உட்கொள் ளும் போது ஏற்படும் பக்க விளைவுகளைக் கொண்டது அல்ல! உங்கள் உடல் எடை, சீராக இருக்க வேண்டியது அவசியம்.

உடல் எடை அதிகரிக்கும் போது, ரத்தக் குழாய்களுக்கான அழுத் தம் அதிகரிக்கும். எனவே, பி.எம்.ஐ., அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்ப வர்களின் இதயத் துடிப்பு அதி கரித்து, தேவைக்கு அதிக மான பணி செய்யும் நிலை ஏற்படும். எனவே, இதயம் சீக்கிரம் செயலி ழக்கும். நடைபயிற்சி, மித ஓட்ட ப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகிய வற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

6 வயது முதலே இதை துவங்கலாம். முதலில் 20 நிமிட ஓட்ட மாக துவங்கி, 18 வயது நிரம்பியவுடன், ஒரு மணி நேர ஓட்டமாக அதிகரித்துக் கொள்ளலாம். புகை பிடிப்பது, அருகில் இருப்பவர் விடும் புகையை சுவாசிப்பது, மூக்குப்பொடி போடுவது, புகையி லை மெல்வது ஆகியவை, ரத்தக் குழாய்களை பாதிக்கும் வகை யிலான ரசாயனங்களை வெளியிடுகின்றன.

இவை ரத்தக் குழாய்களை சுருக்கி விடுவதால், உயர் ரத்த அழுத் தம் ஏற்படுகிறது. உணவில் தினமும் 5 கிராமோ அல்லது அதற்கு குறைவான அளவோ, உப்பு சேர்ப்பது நல்லது. உடலில் நீர் சத்தை தக்க வைக்க இது பயன்படும். இந்த அளவை மீறினால், அதே நீரே, உடலில் தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

பழங்கள், காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் சேரும் உப்புச் சத்தை அதிகரிக்க விடாமல் செய்கிறது. எனவே, தின மும் 4 முதல் 6 முறை பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண் டும். உணவு மூலமாக கிடைக்கும் அல்லது சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி சத்து, சிறுநீரகத்தில் நொதி களைச் சீராகச் செயல்பட வைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பாது காக்கும்.

எனினும், அதிகளவிலோ அல்லது தாறு மாறாகவோ வெயிலில் அலைய நேர்ந் தால், ரத்த அழுத்தமும் சீரற்றதாகி விடும். மது அருந்துவது, இதயத்தை பாதிக்கிறது. ஒரே நேரத்தில் 2 அல்லது 3 கோப்பை மது அருந்தினால் கூட, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றும். அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, இதயம் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகி விடும். தொட ர்ந்து அதிக பதட்டத்துடன் இருந்தாலும், ரத்த அழு த்தம் அதிகரிக்கும்.

தியானம், யோகா ஆகிய வற்றின் மூலம் பதட் டத்தை தவிர்க்க லாம். பதட் டத்தை தவிர்க்க, சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பி டுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை மேற் கொள்கின்றனர். நீரிழிவு நோய், அதிக கொழுப்புச் சத்து சேர்வது, சிறுநீரக நோய், தூக்கமின்மை ஆகியவற்றை கட்டுப் பாட்டில் வைக்க வேண்டும்.

அவை, ரத்த அழுத்தத்தை அதி கரிக்கச் செய்யும் முக்கிய காரணி கள். இப்போ தெல்லாம், 6 – 8 வயது குழந் தைகள் கூட, அளவுக்கு அதிக மாக உப்பு சேர்த்துக் கொள் கின்றனர். அதை ஈடு கட்டும் வகை யிலான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. எனவே, அவர் களின் வாழ்க்கையை முறையை, இளம் வயதிலேயே மாற்றி னால், இப்பிரச்னையை தவிர்க்க லாம்.

(( இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம் ))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: