Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சட்டமன்ற தேர்தலில் ரஜினி…

சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவரிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகு தேர்தல் பணிகளில் இறங்கலாம் என காத்திருக்கிறார்கள்.  1996 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-த.மா.கா. கூட்டணியை ரஜினி ஆதரித்தார். கருணாநிதி, மூப்பனார் ரஜினி படங்களுடன் ரசிகர் கள் மும்முரமாக தேர்தல் பணியாற்றினர். ரசிகர் மன்றம் சார் பில் தமிழகமெங்கும் சுவர் விளம்பரங்கள் செய்தார்கள். போஸ் டர்கள் அச்சிட்டும் ஒட்டினர்.

2004 பாராளுமன்ற தேர்தலில் தனது நிலையை மாற்றி பாரதீய ஜனதா கூட்டணிக்கே எனது ஓட்டு என்று அறிவித்தார். ரசிகர்கள் அவர்கள் விருப்பப்பட்ட கட்சிக்கு ஓட்டு போடலாம் என சுதந் திரம் அளித்தார்.ஆனால் ரசிகர்கள் வேறு கட்சிகள் பக்கம் போக வில்லை. ரஜினி ஆதரித்த கட்சிக்கே வாக்களித்தார்கள்.   அதன் பிறகு வந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் நடுநிலை வகித்தார். அப்போது ரஜினி அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்தது.

ரசிகர்கள் “தலைவா அரசியலுக்கு வா” என்று பகிரங்கமாக போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டினர். சிலர் கட்சி பெயரையும் அறிவித்தனர். கொடியும் அறிமுகம் செய்தார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை அமைதியாக இருந்த ரசிகர்கள் தேர்தல் நெருங்குவதால் மீண்டும் பரபரப்பாகி யுள்ளனர். எந்த கட்சியை ஆதரிப்பது என்று தங்களுக்கு ரகசிய சுற்றறிக்கைகள் வரலாம் என எதிர்பார்க்கிறார்கள்.

ரஜினி வெளிப்படையாக ஆதரவு பற்றி அறிவிப்பு செய்வாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. சமீபகாலமாக எல்லா தலை வர்களுடனும் நட்புறவுடன் இணக்கமாக இருக்கிறார். முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். ஜெயலலிதா சில தினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடியபோது வாழ்த்து தெரிவித்தார்.

பா.ம.க.வினரும் ரஜினி ரசிகர்களும் மோதிக்கொண்ட சம்பவ ங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றன.இதற்காகவே அக்கட்சி க்கு எதிராக அதிரடி முடிவுகளை ரஜினி எடுத்தார். இப்போது பகையை மறந்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசுடனும் நட்பு பாராட்டுகிறார். நேற்று நடந்த ராமதாஸ் பேரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்று வாழ்த்தி விட்டு வந்தார்.
எனவே எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்கள் அவர்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஆதரவாக செயல் படலாம் என்று ரசிகர்மன்ற மேலிடம் மூலம் அறிவுறுத்தப்படு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலின்போது “ராணா” படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று விடுவார் என்றும் கூறப்படு கிறது.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: