தமிழக சட்டசபையின் பதவி காலம் மே மாதம் 11-ந் தேதியுடன் முடிவடைகின்றன.

எனவே, வருகிற மே மாதம் 11-ந் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்து, புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். தமிழக சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிர மாக நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் கால கட்டத்தில் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கும் தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங் களிலும் எந்த தேதியில் தேர்தல் நடத்துவது? எத்தனை கட்டங் களாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்துவருகிறது. தேர்தல் தேதி பற்றி முடிவு செய்வதற்கான இறுதிகட்ட ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.
தலைமை தேர்தல் அதிகாரி குரேசி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 5 மாநிலங்களின் தேர்தல் தேதி, எத்தனை கட்ட மாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப் படுகிறது. நாளை காலை முதல் மதியம் வரை இந்த கூட்டம் நடைபெறும். இதில் தேர்தல் தேதி முடிவாகும் என்று தெரிகிறது. எனவே, நாளை மாலை தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நடைபெறும் கூட்டத்தில் தேர்தல் தேதி பற்றி முடிவு எடுக்கப்படாவிட்டால், நாளை மறுநாள் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண் டும் என்று அரசியல் கட்சிகள் வற்புறுத்தி உள்ளன. எனவே தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு மே மாதம் முதல் வாரம் தமிழக சட்டசபை தேர்தல் வரும் என்று தகவல் வெளியானது. தற்போது ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )