Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 17800-க்கு மேல் உயர்வு

இன்று மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அம்சங்களால் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 17800 புள்ளிக்குமேல் உயர் ந்தது. எப்.எம்.ஜி. கம்பெ னிகள் (4.57 சதவீதம்), பி.எஸ்.யு. நிறுவ னங்கள் (1.99 சதவீதம்) மற்றும் ரியல் எஸ்டேட் (1.29 சதவீதம்) ஆகிய நிறுவனங்களின் பங்கு கள் நல்ல உயர்வை கண்டன. இருப்பினும் மோட்டார் வாகன நிறு வனங்களின் பங்குகள் -0.18 சதவீதம் அளவில் சரிந்தன.

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 18296.55 வரையிலும், குறைந்தபட்சமாக 17718.68 வரையிலும் சென்றது. பங்குச்சந்தை இறுதியில் 122.49 புள்ளிகள் அதிகரித்து 17823.40 புள்ளிகளாக முடிந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி அதிக பட்சமாக 5477 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக 5308.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.

பங்குச்சந்தை இறுதியில் 29.70 புள்ளிகள் அதிகரித்து 5333.25 புள்ளிகளாக முடிந்தது.

இன்றைய பங்குச்சந்தையில் அதிகபட்ச லாபம் அடைந்த நிறுவனங்கள் சில:
ஐ.டி.சி.- 8.55 சதவீதம்
மாருதி- 4.80 சதவீதம்
ஓ.என்.ஜி.சி.- 3.46 சதவீதம்
மகேந்திரா&மகேந்திரா- 2.84 சதவீதம்
எஸ்.பி.ஐ.- 2.40
சரிவடைந்த நிறுவனங்கள் சில:
ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டக்சர்- 5.19 சதவீதம்
ஜெய்பிரசாத் அசோசியேட்ஸ்- 3.51
சதவீதம் ஹீரோ ஹோண்டா- 2.79 சதவீதம்
டாடா மோட்டார்ஸ்- 2.45 சதவீதம்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்- 2.06 சதவீதம்
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply