* 2011 ல் மொத்த பொருளாதார வளர்ச்சி8.6 சதமாக இருக்கும்.
* 2011- 2012 ல் பொருளாதார வளர்ச்சி 9.1 சதமாக இருக்கும்
* உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசா யிகளுக்கு 3 சதம் மானியம்
* விவசாயிகளுக்கு வழங்கிவரும் கடனை அதிகரிக்க முடிவு
* நாடு முழுவதும் புதிதாக 15 உணவுப்பூங்கா திறக்க முடிவு
* மண்ணெண்ணெய், உரத்திற்கு நேரடி வரி மானியம்
* வேளாண்துறையில் தனியார் முதலீடு அதிகரிப்பு
* வீட்டுக்கடன் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும்.
* பாரத்நிர்மாண் திட்டத்திற்கு 58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* கல்வி முதலீட்டு தொகை 24 சதம் உயர்த்தி நடப்பாண்டில் 52 ஆயிரத்து 57 கோடி ஒதுக்கீடு.
* அங்கன்வாடி :ஊழியர்களுக்கு 1500 லிருந்து 3 ஆயிரமாக ஊதிய உயர்வு
* சர்வசிக்ச அபியான் ( அனைவருக்கும் கல்வி ) திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை கொண்டுவர 5 அம்ச திட்டம்
* கிராமப்புற தொலை தொடர்பு வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* முதியோர் உதவி பென்சன் திட்டத்தில் வயது ( 65 ல் இருந்து 60 வயதாக ) வரம்பு தளர்வு
* உணவுப்பாதுகாப்பு திட்டம் நடப்பாண்டில் நிறைவேற்ற உறுதி
* தாக்குதலில் காயத்திற்குள்ளாகும் பாதுகாப்பு படை வீரர்களின் கருணைத்தொகை உயர்வு
* நதிகள் சீரமைப்பு செய்ய சிறப்பு திட்டத்திற்கு 200 கோடி ஒதுக் கீடு
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதல் கடனுதவி.
* நக்சல் பாதிப்பு பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்த சிறப்பு ( 25 முதல் 30 கோடி வரை) திட்டம்.
* தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த் தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1. 60 லட்சத்தில் இருந்து 1. 80 லட்சமாக உயர்வு
* 80 வயதுக்கு மேல் உள்ள முதியோருக்கு ரூ. 500 உதவித் தொகை
* அடிப்படை உணவு மற்றும் எரிபொருளுக்கு சுங்கவரி, சேவை வரியில் மாற்றம் இல்லை
* மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமான வரிவிதிப்பில் ( ரூ. 5 லட்சம் வரை )விதிவிலக்கு
* இரும்பு ,சிமெண்ட் உற்பத்தி வரியில் சலுகை
* சூரிய மின்சக்தி தயாரிப்புக்கான பலகை இறக்குமதி வரி ரத்து
* திரைப்படத்துறையினருக்கு சலுகை
* விமான கட்டண சேவை வரி உயர்வு
ஜம்மு காஷ்மீர் மேம்பாடுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
கம்பெனி்களுக்கான கூடுதல் வரி குறைப்பு
வெளிநாட்டினர் முதலீட்டுக்கு ஊக்குவிப்பு
எது உயர்கிறது – எது குறைகிறது? : தங்கம், பிராண்டடு துணி மணிகள், அழகுசாதனபொருட்கள், மது வகைகள் தனியார் ஆஸ்பத்திரி கட்டணம், விமானகட்டணம், குளிர்சாதன உயர் ரக நட்சத்திர ஓட்டல் கட்டணம் ஆகியன உயருகிறது.
மொபைல்போன்கள், குளிர்சாதனபெட்டி, இரும்பு, சிமென்ட், கட்டுமானபொருட்கள், ஹோமியோபதி மருந்துகள், சில்க் துணிகள் ஆகியன விலை குறைகிறது.
அமைதி காத்த எதிர்கட்சியினர்: பிரணாப் முகர்ஜி பட்ஜெட் உரை முடியும் வரை எதிர்கட்சியினர் பெரும் அளவில் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அனைத்து எம்.பி.,க்களும் பிரணாப்பின் அறிக்கையை கவனமாக, அமைதியாக கவனித்து கொண்டி ருந்தனர்.
அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் பட்டியல்: நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இது வரை 79 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய் தவர் ( 26 நவ., 1947 ) , நிதி அமைச்சர் சண்முகம்ஷெட்டி ஆவார். இதனையடுத்து தொடர்ந்த ஆட்சியில் 10 முறை பட்ஜெட் தாக் கல் செய்தவர் என்ற பெருமையை பெற்றவர் மொராஜிதேசாய் . ப.சிதம்பரம், யஸ்வந்த்சின்கா, ஒய்.பி.,சவான், தேஷ்முக் ஆகி யோர் 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். பிரணாப்பை பொறுத்தவரையில் அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் 6 வது முறையாகும். இந்திய வரலாற்றில் அதிகம் பட்ஜெட் போட்டவர் என்ற பட்டியலில் பிரணாப் 3 வது இடத்தை பிடித்தார்
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )