சென்ற டிசம்பரில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல் போன்களை அறிவித்தன. ஜனவரி முதல் தொடங்கி அவை ஒவ்வொன்றாக வரத் தொடங்கி யுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகமான சில மொபைல்களை இங்கு காணலாம்.
1. எல்.ஜி. பி 520 (P 520): பார் வடிவ மாடலாக 120 கிராம் எடையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இர ண்டு சிம்களில் இயங்கக் கூடியது. இதன் பரிமாணம் 108.9×55.9×12.9 மிமீ. ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 9 மணி நேரம் பேசலாம். நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போ னில் டி.எப்.டி. ரெசிஸ்டிவ் திரை 2.8 அங் குல அகலத்தில் வழங்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட 2.0 மெகா பிக்ஸெல் கேமரா, 15 எம்பி நினைவகம், 4 ஜிபி வரை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி.ஸ்லாட், A2DP இணைந்த புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., வீடியோ பைல் இயக்கம், எஸ்.எம். எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டன்ட் மெசேஜ், இமெயில் வசதிகள் தரப்ப ட்டுள்ளன. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், ஸ்டிரீயோ எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், டாகு மெண்ட் வியூவர், வாய்ஸ் மெமோ, யூனிட் கன்வர்டர், வேர்ல்ட் கடிகாரம், அலாரம், ஸ்டாப் வாட்ச், மொபைல் திருட்டுக்கு எதிரான ட்ரேக்கர் ஆகிய அனைத்து வசதிகளும் கிடை க்கின்றன. ஆயிரம் முகவரிகளை கொள்ளக் கூடிய அட்ரஸ்புக், பெறப்பட்ட, டயல் செய்ய ப்பட்ட, மிஸ் ஆன அழைப்புகள் தலா 100 பதியப்படுகின்றன. எல்.ஜி. அப்ளிகேஷன் ஸ்டோர், என்.டி.டி.வி. ஆக்டிவ், ஆப்பரா மினி 5, டேட்டா வாலட், டிக்ஷனரி, இ-காமிக்ஸ் ஆகிய அப்ளிகேஷன்கள் பதிந்து தரப் படுகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,400.
2. சாம்சங் சாட் 335: இந்த பிப்ரவரியில் வெளியான சாம்சங் சாட் 335 ஏற்கனவே வெளிநாடுகளில் பிரபல மானது. 93 கிராம் எடையில் 111.2×61.2×12மிமீ பரிமா ணத்தில் பார் டைப் போனாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலம் கொண் டது. 2 எம்பி கேமரா தரப்ப ட்டுள்ளது. நான்கு பேண்ட் அலை வரிசையில் செயல்படுகிறது. இதன் நினைவகம் 60 எம்பி. மைக் ரோ எஸ்.டி.கார்ட் மூலம் 4 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். கருப்பு, வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது. ஒரு சிம் இயக்கம் கொண்டது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெயில் வசதி கிடைக்கிறது. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வை-பி, A2DP இணைந்த புளுடூத், அக்ஸிலரோ மீட்டர் ஆகியன தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,040.
(( இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம் ))