Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான பிரவுசர், பயர்பாக்ஸ்

மொஸில்லா நிறுவனம், ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக் கான பயர்பாக்ஸ் பிரவுசரை விரைவில் வெளியிட இருக்கிறது. இதன் சோதனை தொகுப்பு ஒன்று அடுத்த வாரம் வெளி யிட ப்படும் என அறி விக்கப் பட்டுள்ளது. இதில் கிடைக்க இருக்கும் சிறப்பம் சங்கள் குறித்து கீழே காண லாம்.

டெஸ்க்டாப் கம்ப் யூட்டர் களில் பயன்படுத்தப்படும் புக் மார்க், சேவ் செய்யப்பட்ட பாஸ் வேர்ட், ஓப்பன் டேப் மற்றும் பிரவுசிங் ஹிஸ்டரி ஆகிய வற்றை அப்படியே ஆண்ட் ராய்ட் மொபைல் சாதனங்களுக்கு மாற்றிப் பயன்படுத்தக் கூடிய வசதி தரப்ப டுகிறது.

இந்த மொபைல் பிரவுசருக்கென ஏற த்தாழ 150 ஆட் ஆன் தொகு ப்புகள் தரப்படுகின்றன. இவை பிரவுச ருக்குக் கூடுதல் திறன் அளித்து, அதன் செயல்பாட்டினைப் பயனாளர் களின் விருப்பத் திற் கேற்ற படி அமைத் திடும். இந்த வகையில் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப் புகளை வெளியிட்ட பின்னரே, மற்ற பிரவுசர்கள் அவற்றைப் பின்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

பயர்பாக்ஸ் மொபைல் பிரவுசர், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டு மின்றி, நோக்கியா நிறுவனத்தின் மேமோ (Maemo) ஆப்பரே ட்டிங் சிஸ்டம் இயங்கும் என்900 வரிசையில் உள்ள மொபைல் போன்களிலும் இயங்கும். ஆனால் ஐ-போன் களில் இது இயங் காது. ஏனென்றால், ஆப்பிள் நிறுவ னம் தன் போன்களில் இயங் கும் பிரவுசர்கள், தன்னுடைய வெப்கிட் இஞ்சினைப் பயன் படுத்த வேண்டும் என எதிர்பா ர்க்கிறது.

பயர்பாக்ஸ் மொபைல் பிரவுசர், சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ் டம் இயங்கும் மொபைல் போன்களிலும் இயங்காது. அந்த வகை யில் விண்டோஸ் மொபைல் மற்றும் பிளாக்பெரி சிஸ்டங்களில் இயங்காது. இதற்கும் ஒன்றை ஒன்று ஒத்துப் போகாத தொழில் நுட்பங்களே காரணம் ஆகும்.

(*( இணையத்தில் கண்டதை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம் )*)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: