Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆந்திராவில் ஆட்சி கவிழும்?

ஆந்திராவில் ஆட்சி கவிழும்? ஜெகன் கோஷ்டி கெடு

ஒண்ணரை மாதத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்போம், என ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் தனி தெலுங்கானா விவகாரம் விஸ்வரூபம் எடுத் துள்ளது. தெலுங்கானா பகுதியை சேர்ந்த மூன்று லட்சம் அரசு ஊழியர் கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகி ன்றனர். இந்த பகுதி  யை சேர்ந்த எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இத னால், முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான அரசு க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

“மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நலத்திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் கிரண்குமார் ரெட்டி தவறிவிட்டார். இதை நாங்கள் பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியாது, 45 நாட் களில் அவர் தலைமையிலான ஆட்சியை அகற்றுவோம்’ என, ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து எம்.எல். சி.,பிரபாகர் ராவ் குறிப்பிடுகையில், “சட்ட சபையில் பட்ஜெட் கூட்டத்தி

ன் துவக்க உரையாற்றிய கவர்னர் நரசிம்மனை தாக்க, தெலு ங்கானா ராஷ்டிரிய சமீதி உறுப்பினர்களும், தெலுங்கு தேச உறுப் பினர்களும் முயன்றனர். கவர்னரை பாதுகாக்க கிரண்குமார் அரசு முயற்சிக்க வில்லை. ராஜசேகர ரெட்டியின் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் கிரண் குமார் அரசு கவிழ்க்கப்பட்டு, இன்னும் 45 நாட்களில் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும்’ என்றார்.

சிரஞ்சீவிக்கு எதிர்ப்பு:?காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரஜா ராஜ்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி, ஐதராபா த்தில் நடைபெற்ற மாஜி அமைச்சர் ரெட்டியாநாயக்கின் மகன் திருமண த்தில் கலந்து கொள்ள வந்தார். சிரஞ்சீவி எங்கு சென்றாலும், அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோ கிராப் வாங்கு வார்கள். ஐதராபாத்தில் சம்பா பேட்டை யில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள, காரிலிருந்து இறங்கி கல்யாண மண்டபத்துக்கு நுழைய முயன்ற சிரஞ்சீவியை தெலுங் கானா ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப் பினர். இதனால், அவர் திருமணத்தில் கலந்து கொள்ள முடியா மல் திரும்பி விட்டார்.

( ( நாளேடு கண்டெடுத்த செய்தி ) )

Leave a Reply