Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எச்சரிக்கை: ஆண்களுடன் மனம் விட்டு பேச செல்போனில் அழைப்பு

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங் களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப் பவர்களின் செல் போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெய ரில் மனம் விட்டு பேச லாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வரு டமாக வாடிக்கையாக இருந்து வரு கிறது.

கோவையில் பெரும்பாலான செல் போன் உபயோகிப்பவர் களுக்கு இது போன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத் தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீ ங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச உங்களுயை லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக மாற கால் பண்ணுங்க. பல்லவி, சுமா, மாலதி ஆகியோர் உங்கள் போனுக்கு காத்திருக் கிறார்கள். இப்படி தான் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப் பட்டிருந்தது.

சில நேரங்களில் இது போன்ற குறுந்த கவல்கள் திருமணமான வர்களின் வீடுகளில் வீண் பிரச்சினைகளை கூட உண்டாக்கியது. இதனால் ஏராள மானவர்கள் கோவை போலீஸ் கமிஷ னர் சைலே ந்திரபாபுவிடம் புகார் செய்தனர்.

அவரது உத்தரவின் பேரில் கோவை சைபர் செல் போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்.எம்.எஸ். குறித்து தகவலறிய களமிறங் கினர். முதற்கட்ட விசாரணையில் வெளி நாட்டில் இருந்து இந்த செல்போன்களில் பெண்கள் பேசுவது போல இருந்தது. இதனால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆங்கில செய்தி தாளில் டெலி காலர் தேவை என்று விளம்பரம் செய்து கோவை காந்திபுரத்தை சேர்ந்த தனியார் கால் சென்டர் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
அதனை ரகசியமாக கண்காணித்த சைபர் செல் போலீசார் அந்த பணிக்கான நேர்முக தேர்வுக்கு சென்று வந்த பெண்கள் மூலம் சில தகவல்களை பெற்றனர்.இதில் மனம் விட்டு பேசலாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆண்களுடன் பெண்களை ஆபாசமாக பேச வைத்து அவர்களை தவறான வழிக்கு கூட்டி செல்லும் நிறு வனம் என்பது தெரிய வந்தது.

உடனடியாக சைபர் செல் சப்-இன் ஸ்பெக்டர் சந்திரமோகன் தலை மையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி முக்கிய ஆவ ணங்களை பறி முதல் செய்தனர். கணவன்-மனைவி என 2பேர் சேர் ந்து இந்த நிறுவனத்தை நடத்துவது தெரிய வந்தது. ஆண் களிடம் செக்சி யாக, ஆபாசமாக பேசு வதற்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பள மாக வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு தொடர்ந்து 8 மணி நேரம் செல்போனில் ஆண் களுடன் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி வலையில் வீழ்த்தி ஆபாசமாக பேசி ஆண்களின் மனதை கெடுத் து உள்ளனர்.

இத்தகைய குறுந்தகவலால் ஏராள மான குடும்பங்களில் பிரச் சினை வெடித்து வருவது குறிப் பிடத் தக்கது. இந்த ஆபாச சாட் கால் சென்டரின் உரிமையா ளர்களான கணவன்- மனைவியிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் பல திடுக் கிடும் உண்மைகள் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

(நாளேடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply