சூரிய ஒளியில் வண்ணம் மாறும் மல்டி கலர் தொழில்நுட்பம் கொண்ட புதிய டிஸ்கவர் மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமு கப்படுத்தியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு அறிமுகப் படுத் தப்பட்ட டிஸ்கவர் மாடல், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற் பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எரி பொருள் சிக்கனத் திற்கு எடுத்துக் காட்டாக திகழும் டிஸ்கவர் மாடல், விற்பனை யில் 40 லட்சம் என்ற புதிய இலக்கை கடந்துள்ளது. இதை கொண் டாடும் வகையில், மல்டிகலர் தொழில்நுட்பம் கொண்ட டிஸ் கவர்-100 என்ற புதிய மாடலை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய் துள்ளது. எரிபொருள் சிக்கனத்தில் புதிய டிஸ்கவர்,தனது வம்சத்தை விஞ் சும் என பஜாஜ் நிறுவனம் சான்று கூறியுள்ளது. பஜாஜ் ஆட்டோ தலைவர் (மோட்டார்சைக்கிள் பிரிவு) வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ‘ஆட்டோமொபைல் துறை யில் முதன் முறையாக மல்டி கலர் தொழில்நுட்பத்தில் டிஸ்கவர்- 100 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளோம். மல்டி கலர் தொழில் நுட்பத்தின் மூலம், சூரிய ஒளியில் பைக்கின் வண்ணம் மாறி மாறி பளபளக்கும்.மெஜந்தா ரெட் மற்றும் கோல் டன் கிரீன் ஆகிய இரண்டு மல்டி கலர் வண்ணங்களில் புதிய டிஸ் கவர் கிடை க்கும். தவிர, புதிய டிஸ்கவர் லிட்டருக்கு 80கி.மீ செல்லும் செல் லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 100சிசி ரகத்தை சேர்ந்த மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது புதிய டிஸ்கவர் அதிக மை லேஜ் தரும் பைக்காக இருக்கும்.இது வாடிக் கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு பெறும் என்று எதிர் பார்க்கி றோம்,’ என்று கூறினார்.
( ( நாளேடு கண்டெடுத்த செய்தி ) )