நாளை மார்ச் 2 மகாசிவராத்திரி தினம். உசிலம் பட்டி பகுதியில் மகா சிவராத்திரியை குல தெய்வ வழி பாட்டுக்கா ன நாளாக கொண்டா டுகின் றனர். தொழில் கார ணமாக வெளி யிடங்க ளுக்கு சென்ற வர்கள் இந்த நாளில் தங்கள் குல தெய்வ வழிபாட்டுக்கு வருவ தால் மகா சிவராத் திரியன்று பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடுகின்றனர். குலதெய்வங்களின் உட மைகள் வைக்கப்பட்ட பெட்டிகளை பெட்டி வீடுகளில் இருந்து பூஜாரி கள்,
கோடாங்கிகள், சாமியாடிகள் கோயி ல்களுக்கு மேள தாளத்துடன் எடுத்துச் செல்கின்றனர். கோயிலுக்கு கொண்டு சென்று மகா சிவ ராத்திரி தினத்தில் வழிபாடு நடத்துகின்றனர். தொடர்ந்து பூஜாரிகள் பக்தர்களுக்கு குறிசொல்லு ம் வைபவமும் அதிகாலை யில் நடக் கிறது. வழிபாடு முடிந்தபின் பெட்டிகள் மீண்டும் பெட்டி வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மூன்று தினங்கள் விமரி சையாக நடக்கும் இந்த நாட் களில் உசிலம்பட்டி பகுதி மக்கள் வெள் ளத்தில் மிதக்கும். இதற் கான முன் னேற் பாடுகள் தயாராகி வருகின்றன.
கருமாத்தூரில் கலியுக சிதம்பர ஈஸ்வரர் கோயிலில் திருவாச்சி மட்டுமே சுவாமியாக வழிபடப் படுகின்றது. தெய்வங்களுக்கு பஞ் சாமிர்தம், பச்சரிசிமாவு, தேங்காய் பழம் வைத்து வழிபடுகி ன்றனர். காலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதன் பின் பெட்டிகளை எடுத்து அருகில் உள்ள பெருமாள் சுவாமி, விரு மப்ப சுவாமி பேச்சி யம்மன் கோயிலுக்கு கொண்டு செல்கின் றனர். அங்கு வழிபாடு களுக்கு பின் கிடாவெட்டு நடக் கிறது. கரு மாத்தூர் ஒச்சாண்ட ம்மன் பெயர்விளங்கிய ஆங்காள அய்யர் கோ யிலில் பொங்கல், கரும்பு, வாழைப்பழம், தேங்காய், இளநீர் இவற் றுடன் சுக்கு, மிளகு, பச்சரிசி மாவு, சர்க்கரை க
லந்து மாவுடன், பயறு ஆகியவை வைத்து வழிபாடு நடத்து கின்றனர். பூஜைகள் நடக்கும் போது பூஜாரிகள் வாய்களில் துணி களை கட்டிக் கொண் டு பூஜை நடத்துவர். அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக் கிறது. கருமாத்தூர் நல்லகுரும்பய்யர் கோயி லில் சுவாமிக்கு விபூதி வெள்ளை நிறத்தில் புத்தாடையும், மரிக்கொழுந்து மட்டு மே சூட்டுகின் றனர். இங்கும் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு வழிபா டு நடக்கிறது.
மற்ற கோயில்களைப்போல் அல்லாமல் இந்த கோயி லில் மூன்றாவது நாளான பாரி வேட்டை தினத்தில் மதி யம் 3 மணிக்கு கன்னிமார்கள் ஆட்டம் நடக்கிறது. வயதுக்கு வராத பெண்களின் சாமியா ட்டம் நடந்து முடிந்தபிறகு தான் திரு விழா நிறைவுக்கு வருகிறது. பாப்பாபட்டி ஒச்சா ண்டம்மன் கோயிலுக்கு உசி லம்பட்டி கருப்புகோயிலில் இருந்து சுவாமி பெட்டி கொண்டு
வரப்படுகின்றது. இரவு முழு வதும் பக்தர்கள் தங்கள் ஆதி வழக் கப்படி புத்தாடைகள், எண்ணெய், மாவு, பயறு, கரும்பு, வாண வேடிக்கை போன்றவற்றுடன் கோயி லுக்கு வருகின்றனர். அதி காலை மணியளவில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பெட்டி திரும்பி வரும்போது உசிலம் பட்டியில் பெட்டிகளை வரவே ற்று கருப்புகோயிலுக்கு கொண்டு செல்லும் வைபவத்தை பார்க்க பெரும் திரளான கூட்டம் கூடுகிறது. இந்த கோயில்கள் தவிர உசிலம்பட்டி பகுதியில் எட்டுநாடுகள், 24 உபகிராமங்கள் என அழைக்கப்படும் கிராமங்களில் உள்ள குலதெய்வக் கோயில் களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )