Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

39 மனைவிகள்; 94 குழந்தைகள்: உலகின் மிகப் பெரிய “குடும்பஸ்தன்’ ஜியோனா சானா

பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், உலகி லேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெரு மையை, ஒரு இந்தி யரே பெற்றுள்ளார். வட கிழக்கு மாநில மான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, “இளை ஞர்’ தான், 39 மனை விகளுடன், பெரிய குடு ம்பமாக வாழ்ந்து வருகிறார்.

விலைவாசி விண் ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, இமாலய சாதனை. ஆனால், அந்த காலத்தில் மன்னர் களும், பிரபுக்களும் ஏராளமான மனைவிகளை கொண்டிரு ந்தனர். ராமாயணத்தில், தசரத சக்ரவர்த்தி, 60 ஆயிரம் மனை வியருடன் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பது சட்டமா க்கப் பட்டது. குறிப்பிட்ட சில சமூகங்களை தவிர்த்து, இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. வடகிழக்கு மாநில மான மிசோ ரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்பவர், 39 மனை விகளுடன் வாழ்ந்து, உலகின் மிகப் பெரிய குடும்பத்தை கொண் டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 39 மனைவிகள் மூலம் 94 குழந்தை களை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமக ள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டினார்.

இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஜியோனா சானா, தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை துவக்  கியுள்ளார். தன்னைச் சுற்றி வரும் பல பெண்களில் இருந்து ஒரு வரை அவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக குடும்பத்தினர் கூறுகி ன்றனர். தற்போது 67 வயதான ஜியோனா சானா, உள்ளூர் பெண் களை தவிர்த்து, அமெரிக்கா சென்று, அங்கு ஒரு பெண்ணை பார்த்து மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார். திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக் கிறார். இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறை க்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார். “நான் கடவுளின் சிறப் புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற் காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார். நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப் படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்’ என்று கூறி யுள்ளார், “காதல் மன்னன்’ ஜியோனா சானா.

(*( இணையத்தில் கண்டதை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம் )*)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: