ஆக்சிலரேட்டர் பெடல் பிரச்சினை காரணமாக சீனாவில் விற்பனை செய்யப்பட்ட 5000 லெக்சஸ் மாடல் கார்களை திரும் பெறுவதாக டொயோட்டோ சீனா நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில் நுட்ப பிரச்சினை காரண மாக ஜப்பானை சேர்ந்த டொ யோட்டோ நிறுவனம் கார்களை திரும்ப பெறும் அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகி றது. கடந்த 2009ம் ஆண்டு,தரை விரிப்பு(புளோர் மேட்) மற்றும் ஆக்சிலரேட்டர் பெடல் பிரச்சி னை காரணமாக பல லட்சம் வாகனங்களை திரும்ப பெறுவதாக டொயோட்டோ அறிவித்தது. இதுமட்டுமின்றி, ஏற்கனவே பல முறை திரும்ப பெறும் அறிவிப்புகளை வெளியிட்டு வந்ததால், வாடிக்கையாளர் மத்தியில் டொயோட்டோவுக்கு இருந்த நன் மதிப்பு குறைந்தது. இதன் எதிரொலியாக, அமெரிக்க கார் சந் தையில் 17சதவீத இடத்தை பிடித்திருந்த டொ யோட் டோவின் விற்பனை 15சதவீதமாக குறைந்தது.
இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து 2006 ம் ஆண்டு ஜூலை வரை சீனாவில் விற்பனை செய்யப்பட்ட லெக் சஸ் மாடல் கார்கள் ( 5,202) பல்வேறு கோளாறுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன. இவை அனைத்தும் திரும்பப் பெறப் படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
( ( நாளேடு கண்டெடுத்த செய்தி ) )