Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அனைத்து கணிணிகளுக்கும் தேவையான அவசிய மென்பொருள்

இன்றைய உலகில் கணிணி உபயோகிக்காத இடமே இல்லை. நமது கணிணியின் செயல்பாட் டை அதிகரிக்க நாம் சில பயனு ள்ள மென் பொருட்களை நிறுவி இருப்போம். இந்த வரிசை யில் நாம் இந்த மென் பொரு ளையும் நிறுவுவது அவசிய மாகிறது.

நாம் கணிணியில் வேலை செய்து கொண்டு இருப்போம். திடீரென ஏதோ ஒரு முக்கியமான வேலை யாக அல்லது ஞாபக மறதியா லோ நம் கணிணியை அணை க்காமல் சென்று விடும். நம் வீட்டு க்கு போன பிறகு தான் ஞாபகம் வரும். அந்த நேர ங்களில் நம் கணிணியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.

அந்த சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோக மானதாக இருக்கும். இந்த மென் பொருளில் கொடு க்கப்பட்டுள்ள நேர அளவை பொருத்து உங்கள் கணிணி தானாகவே Shut down செய்யப்படும். இந்த மென்பொருள் மூலம் Automatic Restart செய்து கொள்ளும் வச தியும் உள்ளது.

இந்த மென் பொருளில் Auto Shut down, Auto Restart, Auto Logoff, Auto Hibernate ஆகிய வசதிகள் அடங்கி உள்ளது. இதற்கு முத லில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவி கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மென் பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

இதில் உங்களுக்கு தேவையான அளவு நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் தேர்வு செய்தால் ஒரு நாளைக்கு தான் தேர்வு செய்ய முடியும். வாரம் முழு வதும் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆக வேண்டும் என நினைத்தால் கீழே உள்ள Every week on என்பதில் க்ளிக் செய்து இதில் உள்ள நாட்களை தேர்வு செய்து கொண்டு நேரத்தையும் தேர்வு செய்து கொள்ளவும்.

கீழே உள்ள பகுதியில் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப் பிட்ட நேரத்தில் Shutdown ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள் ளலாம். இதில் குறிப்பிட்ட வேலைக்கு குறிப்பிட்ட Shortcut key செட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

இதை செட் செய்ய Shortcuts tab க்ளிக் செய்து உங்கள் கீபோர்டில் ctrl அழுத்தி உங்களுக்கு வேண்டிய எழுத்தை அழுத்தவும். இனி நாம் நம் கணணியை அணைக்காமல் சென்றாலும் கவலை பட வேண்டியதில்லை. நம் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.

http://download.cnet.com

இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: