ஜெர்மனி சேர்ந்த வோக்ஸ்வாகன் கார் நிறுவனம், இந்தியாவில் ஏழு மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் போ லோ மற்றும் வென்டோ காருக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் பஸாத் கார், கடந்த 2007ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட் டது. டீஸலில் இயங் கும் இந்த காரில், 2,000 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. இரண்டு வேரியன்ட்களில் விற்ப னையாகும் இந்த காரின் விலை ரூ.22 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரை உள்ளது.
இந்த சூழ்நிலையில், ‘புளூமோஷன்’ என்ற புதிய தொழில்நுட்பம் கொண்ட, புதிய பஸாத் காரை, அடுத்த மாதம் இந்தியாவில் வோக் ஸ்வாகன் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இந்த தொழில் நுட்பம், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாதது என்ற பெருமை க்குரியது. போக்குவரத்து நெரிசலின் போதோ, சிக்ன லில் நிற்கும்போதோ, கிளெட்ச்சில் இருந்து காலை எடுத்து விட்டால், கார் இன்ஜின் நின்றுவிடும். மீண்டும் கிளெட்ச்சை அழுத் தினால், கார் இயங்க தொடங்கி விடும். இதற்கு ‘ஸ்டார்ஸ்டாப்’ என்று பெயர். இது உட்பட பல நவீன அம்சங்கள், ‘புளூமோஷன்’ தொழில்நுட்பத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த காரின் விலை இன்னும்அறிவிக்கப்படவில்லை.
( நாளேடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )