Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆற்றில் விழுந்த யானைக்குட்டியை போராடி மீட்ட தாய் யானை!

குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்புரசத்திரம் பகுதியில் கடந்த சில நாட் களாக 2 யானைகள் ஒரு குட்டியுடன் உலா வந்தன. வனத் துறையினரும், பொது மக்களும் அந்த யானைகளை கொலக் கம்பை பகுதி க்கு விரட்டியடித்தனர்.

அதன் பின்னர் அந்த யானைகள் காட்டை விட்டு வெளியேறி அரசு விதைப் பண்ணை வழியாக குன் னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டில் வந்து கொண்டி ருந்தன.

அப்போது யானைகளின் கண்களுக்கு அங்குள்ள லாஸ் பால்ஸ் நீர் வீழ்ச்சி தென்பட்டது.மகிழ்ச்சியடைந்த யானைகள் அதில் குளிக்க இறங்கின. அப்போது குட்டி யானை கால் தவறி ஆற்றுக் குள் விழுந்தது.

அதை மீட்க மற்றொரு யானை முயன்றது. அதுவும் ஆற்றுக்குள் விழு ந்தது. 2 யானைகளை வெளியே நின்று கொண்டிருந்த தாய் யானை 1 மணி நேரம் போராடி மீட்டது.

பின்னர் 3 யானைகளும் அந்த ஆற்றில் ஆழம் இல்லாத பகுதியில் 1 1/2 மணி நேரம் ஆனந்த குளியல் போட்டன.

ஒரு வழியாக ஆனந்த குளியலை முடித்துக் கொண்டு தேயிலை தோட் டத்தின் வழியாக பர்லியார் நோக்கி சென்றன. யானை களின் ஆனந்த குளியலை அந்த வழியாக வந்த சுற்றுலா பயணி கள் கண்டு ரசித்தனர்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: