Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சோலார் இன்வெர்டர்கள் தயாரிப்பில் சுகம்

பவர் பேக் அப் சிஸ்டம் (இன்வெர்‌டர்கள்) தயாரிப்பில் முன்ன  ணியில் உள்ள சுகம் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம், விரை வில் சோலார் இன்வெர்டர்கள் தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர் களை சந்தித்த சுகம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி யும் மற்றும் நிர்வாக இயக்குனருமான குன்வர் சச்தேவ் கூறியதா வது, குர்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தங் கள் நிறுவனம், கடந்த நிதியாண்டில், ரூ. 700 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. சூரிய சக்தி அடிப்படையிலான எல்இடி தெருவிளக்குகளை ப‌ஞ்சாப் மற்றும் ஹரியானா நகரங் களில் அமைக்கும் பணியை நிகழ்த்தி வருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள், சோலார் இன்வெர்டர் வர்த்தகத்திலும் ஈடுபட திட்ட மிட்டுள்ளது. இதற்காக, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நிறுவ னங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்காக, ரூ. 250 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2011ம் ஆண்டில், ரூ. 1,200 கோடி அளவிற்கு வருமானம் ஈட்ட திட்டமிட் டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிறுவனம், இன்வெர்டர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்ற முன்னணி நிறவனங்களான லூமினஸ் மற்றும் மைக்ரோடெக் நிறவனங்களை பின்னுக்குத் தள்ளி முனனணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: