பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஈடுபடும் 16 விதமான குற்றங்க ளையும், அதற்கான தண்டனையையும் தேர்வுத்துறை வெளியி ட்டு எச்சரித்துள்ளது.* மாணவர் தன்னிடம் உள்ள துண்டுச் சீட்டு, புத்தகங்களை தாமாக முன்வந்து கண்காணிப் பாளரிடம் தந்தால், தலைமை கண்காணிப்பாளர் ஒரு முறை எச்சரித்து விடலாம். அதே தவறை மீண்டும் செய்தால், தேர்வு அறையில் இருந்து வெளி யேற்றலாம்.* தடை செய்ய ப்பட்ட தேர்வு பொருட்கள் இரு ப்பதை கண்காணிப்பாளர் கண்டறி ந்தால், எழுத்துப்பூர்வமான விளக்கம்பெற்ற பின், மாணவர், தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவார்.* “காப்பி’ யடித்தால், தேர்வு அறையை விட்டு வெளியேற் றப்படுவார். ஓர் ஆண்டு வரை தேர்வு எழுத முடி யாது.* பிட் அடித்து பிடிபட்டால், அந்த தேர்வு மார்க் ரத்து செய் யப்படும். இருமுறை தேர்வு எழுத அனுமதியில்லை* மாணவர் மற்றும் அவரை சார்ந்தவர் கண்காணிப்பாளரை தவறான நோக்கில் அணுகினால், குறிப் பிட்ட காலம் வரை தேர்வு எழுத தடை.* ஆள்மாறாட்டம் செய் தால், தேர்வு ரத்து மற்றும் வாழ் நாள் தடை விதிக்கப்படும்.* விடைத்தாளில் தேவையற்ற வார்த்தை எழுது தல், இயக்குனர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதுதல் போன்ற குற் றங்களுக்கு, குறிப்பிட்ட பாடம் மற்றும் அனைத்து தேர்வும் ரத்து செய்யப்படும்.* கண்காணிப்பாளருடன் அறைக்குள்ளும், வெளி யேயும் தகராறு செய்தால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத முடியாது.* தேர்வு நேரத்தில் அறைக்கு வெளி யே வினாத்தாளை தந்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை.* பிடிபட்ட பின் தலைமை கண்காணிப்பாளர் சொல்வதை கேட்காமலிரு ந்தால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத அனுமதி கிடையா து.* விடைத்தாளுக்குள் பிட் இருப்பது திருத்தும் போது தெரிய வந்தால், தேர்வு ரத்து.* மற்றொரு மாணவரின் விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை.* விடைத்தாளில் பெயர், இன்ஷியல், வேறு குறியீடு எழுதினால், மாணவரிடம் எழுதி வாங்கிய பின் மன்னிப்பு, அல்லது அந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படும்.*தேர்வு அறைக் குள் வினாத் தாளை அடுத்தவர் மீது வீசினால் அன்றைய தேர்வு ரத்து செய் யப்படும்.
ஆசிரியருக்கும் தண்டனை: பிட் அடிக்கும் மாணவனுக்கு மட்டு மின்றி, தேர்வறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரி யருக்கும் இனி தண்டனை வழங்கப்படும் என கல்வித்துறை அறி வித்துள்ளது. அதன்படி தேர்வு அறையில் மாணவன் பிட் அடிப் பது கண்டறியப்பட்டால், அங்கு கண்காணிப்பு பணியில் இருக் கும் ஆசிரியர் மீது, “17ஏ, 17பி’ பணியாளர் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )