தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் சந்திப்பிலும் முன் னேற்றம் ஏற்படா ததால், திமுக – காங்கிரஸ் இடை யிலான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையில் இழு பறி நீடித்துள்ளது.
|
இதன் தொடர்ச்சியாக, திமுக – காங்கிரஸ் இடை யிலான கூட்டணி முறிவத ற்கான சாத்தியம் உள்ளது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் நேற்றிரவு சென்னை வந்தார்.
சென்னை – மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அண்ணா அறிவாலயம் வந்த அவர், முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இரவு 9.15 முதல் 10.45 மணி வரை 90 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட விருந்தது.” காங்கிரஸுடன் வியாழக்கிழமையும் பேச்சு வார்த்தை தொடரும்,” என்று கருணாநிதி அறிவித்தார்.
ஆனால், இந்தச் சந்திப்பை ரத்து செய்துவிட்டு குலாம்நபி ஆசாத் மற்றும் கே.வி.தங்கபாலு இருவரும் இன்று காலை 9.45 மணி அளவில் சென்னையில் இருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மேலும், ஆசாத்தும் தங்கபாலுவும் செய்தியாளர்களை சந்திப் பதை தவிர்த்துவிட்டதும் சந்தேகத்தைக் கூட்டியுள்ளது.
நேற்றைய பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸுக்கு 65 தொகுதிகள் வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தியதாகவும், ஆனால் திமுக தரப்பிலோ 53 முதல் 55 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என உறுதியாக இருந்ததாகவும் இரு கட்சிகளின் வட்டார ங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிகி றது.
இதையடுத்து, கூட்டணியில் நீடிப்பதா அல்லது திமுக ஒதுக்கும் தொகுதிகளைப் பெற்றுக் கொள்வதா என்பது குறித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இறுதி முடிவை எடுப்பது தொடர்பாக, அவரிடம் இன்று ஆசாத்தும் தங்கபாலுவும் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
( வார இதழ் ஒன்றில் கண்டெடுத்த செய்தி )